கல்ஹின்னையில் முஸ்லிம் இளைஞர் சுட்டுக்கொலை; ஒருவர் மடக்கிப் பிடிப்பு! Video

1692145450gun

கண்டி, கல்ஹின்னை அங்கும்புற பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 30 வயதானவர் என்பதுடன் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து டி 56 ரக துப்பாக்கியொன்றும், 20 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோக சம்பவத்துக்கு பயன்படுத்திய சிவப்பு நிற கார் ஒன்றை பூஜாபிட்டிய பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில் துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,மற்றும் ஒருவர் படுகாயங்காயத்துக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video: Virakesari

இப்படியும் ஒரு சந்தேகம்!

கல்ஹின்னையில் தற்போது நடந்த சம்பவம் காதல் விவகாரம் என்று பொலீஸ் சொல்கிறது. ஆனால் கொலை நடக்கும் போது சுமார் நூறு மீற்றர் தொலைவில் நான் அங்கு நின்றிருந்தேன். வேகமாக வந்த சிவப்பு கார் மெதுவாக வேகத்தை குறைத்து பின்னுக்கு வந்து சுட்டனர்.

அந்த காரில் வந்தவர்கள் வேண்டுன்றே இனவாதத்தினை தூண்டும் நோக்கத்தில்தான் சுட்டது போன்று தென்பட்டது. காரணம் ஒழுங்கையால் அப்போதுதான் வந்து கொண்டிருந்த சுடப்பட்ட நபர்களை அவதானிக்க காரில் வந்தவர்களுக்கு எந்த சந்தர்ப்பமும் இல்லை.

மேலும் இருவரை சுட காரணம் எதுவுமில்லலை. சுடப்பட்டவர்களுக்கு பக்கத்தில் அந்த நேரத்தில் யாரும் இல்லை. எனவே காரை யாரும் வழிமறிக்க முடியாது. பிடிபட்ட மாளிகாவத்தையை சேர்ந்த நபர்; தான் வீதியில் நின்று கொண்டிருந்ததாகவும் தன்னை மிரட்டி காரில் ஏற்றி bag ஐ வீசிவிட்டு சற்று தூரத்தில் இறக்கிவிட்டு துப்பாக்கியையும் வீசிவிட்டு சென்றதாகவும் முஸ்லிம்களிடம் பிடிபட்டு மரத்தில் கட்டிவைக்கப்பட்ட போது கூறியுள்ளார்.

பிடிபட்ட சாதாரண முஸ்லிம் பொதுமகனிடம் துப்பாக்கி இருந்தது என்பது நம்பக் கூடிய தகவலாக இல்லை. அவர் அடிக்கடி பக்கத்தில் உள்ள மைதானத்துக்கு வந்து விளையாடுவதை பலர் பார்த்துள்ளார்கள். யாவற்றையும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.

-Arsath Farveis-
கல்ஹின்னையிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*