தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பீடம் நிறுவப்பட வேண்டும்; பொன் விழாவில் பிரகடனம்!

pon-vila-51pon-vila-55

(அஸ்லம் எஸ்.மௌலானா)

மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பீடம் நிறுவப்பட்டிருப்பது போன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலும் அத்தகைய பீடம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தை கோரும் தீர்மானம் மருதமுனையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்க அனுசரணையில் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சினால் வருடாந்தம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் தீர்மானமும் அங்கு நிறைவேற்றப்பட்டது.

இரு தினங்களைக் கொண்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழாவின் முதலாம் நாள் மாலை நிகழ்வுகள் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி வளாகத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றன. இதன்போது பாண்டிருப்பு எல்லையில் இருந்து கல்லூரி வளாகம் வரை முஸ்லிம் பாரம்பரிய ரப்பான், பொல்லடிகளுடன் பொன் விழா ஊர்வலம் இடம்பெற்றதுடன் அங்கு நினைவுத் தூபி ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழாவின் முன்னோடியான மூத்த இலக்கியவாதி செய்யித் ஹசன் மௌலானா, பொன் விழா வரவேற்புரையையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பொன் விழா பிரகடன உரையையும் நிகழ்த்தினர். இவற்றைத் தொடர்ந்து அமைச்சர் ஹக்கீமினால் பொன் விழா பிரகடனம் வாசிக்கப்பட்டது.

இதன்போது மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் மேற்படி இரண்டு தீர்மானங்களுடன் பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் மற்றும் தமிழ் இலக்கிய பாடப் புத்தகங்களில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய படைப்புகள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இவ்விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், உலமாக்கள், இலக்கிய படைப்பாளிகள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலக்கிய பேராளர்கள் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவர் ஏ.எல்.ஏ.மஜீத், உயர் பீடச் செயலாளர் மன்சூர் ஏ.காதர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உலமாக் கட்சித் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.

pon-vila-43pon-vila-47 pon-vila-49pon-vila-52 pon-vila-53pon-vila-3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*