ஹக்கீம், ஹசன் அலி இரகசிய சந்திப்பு; செயலாளரை விட்டுக் கொடுத்து தேசியப் பட்டியலை ஏற்றுக்கொள்ள இணக்கம்!

120904020932home-logo1(பாதுஷா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி ஆகியோருக்கிடையே நேற்று வியாழக்கிழமை இரவு இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் யார் என்பது தொடர்பிலான சர்ச்சை குறித்து இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருமாறு அவர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே மிகவும் அவசரமாக இரவோடு இரவாக இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளதாகவும் இதன்போது தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி ஆகிய இருவரும் மாத்திரம் தனித்திருந்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிய வருகிறது.

இப்பேச்சுவார்த்தையின் முடிவாக இன்று தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் தனக்கு சார்பான வாதங்களை எதனையும் முன்வைக்காமல், கட்சியின் புதிய செயலாளர் தொடர்பில் ஏற்கனவே தன்னால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனை கடிதத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதற்கு ரவூப் ஹக்கீமிடம் ஹசன் அலி இணக்கம் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது.

இதற்குப் பகரமாக ஹசன் அலியை தேசியப்பட்டியல் மூலம் எம்.பி.யாக்கி இராஜாங்க அமைச்சு பதவியொன்றை பெற்றுத் தருவதாக ரவூப் ஹக்கீம் உறுதியளித்திருக்கிறார். இதனை ஏற்றுக் கொண்டே ஹசன் அலி மேற்படி இணக்கப்பாட்டை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதன் பிரகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ செயலாளராக மன்சூர் ஏ.காதர் செயற்படுவதுடன் கௌரவ செயலாளர் நாயகமாக ஹசன் அலி தொடர்ந்தும் பதவி வகிப்பதற்கு இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டுள்ளனர் என மேலும் அறியக் கிடைத்துள்ளது. @JM

hasan-ali-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*