காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகம் அபார வெற்றி!

sports-0004

(யூ.கே.காலித்தீன்)

மாளிகைக்காடு றியல் பவர் விளையாட்டுக்கழகத்தின் 5வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இக்ரா மொவையில் நிறுவனத்தின் அனுசரணையுடன் காரைதீவு கனகரட்ண மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்ற 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மாளிகைக்காடு றியல் பவர் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டுக்கழகம் மோதியது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மாளிகைக்காடு றியல் பவர் விளையாட்டு கழகத்தினர் 17.4 பந்துகளில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் றியல் பவர் விளையாட்டு கழகம் சார்பாக அதிக பட்சமாக ARM.அஸீம் 44 ஓட்டங்களை பெற்றார்.

வெற்றியிலக்காக பதிலுக்கு 91 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெற்றால் வெற்றி என துடுப்பெடுத்தாடிய. காரைதீவு ஜொலி கிங்ஸ் விளையாட்டு கழகத்தினர் 19.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களை பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுபீகரித்தனர்.

றியல் பவர் விளையாட்டு கழகம் சார்பாக பந்து வீச்சில் சஜாத் 4 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், பாஹீம் 4 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார், றிஜாத் 3.4 ஓவர்கள் பந்து வீசி 25 ஓட்டங்களை கொடுத்து1 விக்கெட்டினை கைப்பற்றினார், ஆஸாத் 4 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களை கொடுத்து ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்களாக 1 விக்கெட்டினையும் கைப்பற்றினார்.

இப்போட்டிக்கு பிரதம அதிதியாக இக்ரா மொவையில் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளருமான யூ.எல். அப்துல் சத்தார் மற்றும் தொழிலதிபர் ஏ. முஹம்மது நௌசாத் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கிண்ணங்களை வழங்கி வைத்தனர்.

sports-0002 spoets-0001

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*