கல்முனை மாநகர சபையில் தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு நிகழ்வு!

KMC- National Unity (19)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க, ஒருங்கிணைப்பு வாரத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபையில் அது தொடர்பிலான விசேட நிகழ்வு ஒன்று மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அவர்கள் தலைமையில் மாநகர சபா மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர சபையின் சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், பொறியியலாளர் எம்.சர்வானந்தன், கணக்காளர் ஏ.சி.தஸ்தீக், நிதிப்பிரிவு தலைமை உத்தியோகத்தர் எம்.எம்.ஜௌபர், சுகாதார பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.அஹ்சன் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய நல்லிணக்க, ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அதிலுள்ள வகிபாகம் பற்றி மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, தெளிவுபடுத்தி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எழுந்து நின்று தேசிய நல்லிணக்கம் தொடர்பிலான ஒருங்கிணைப்பு பிரகடனத்தை மொழிந்து நிறைவேற்றினர்.

KMC- National Unity (24) KMC- National Unity (1) KMC- National Unity (23) KMC- National Unity (27) KMC- National Unity (33) KMC- National Unity (15) KMC- National Unity (12) KMC- National Unity (9)KMC- National Unity (13) KMC- National Unity (4)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*