UAE ‘Business Excellence Award’ விழாவில் பங்கேற்க இலங்கையை பூர்விகமாகக் கொண்ட பிரித்தானிய தொழில் முனைவர் ஜெஸீமுக்கும் அழைப்பு!

Jazeem (4)

ஐக்கிய அமீரகத்தில் 2020 ஆம் ஆண்டு நோக்கிய பயணத்தில் தொழில் முனைவோரையும் தொழில் முயட்சியாண்மையும் முன்னேற்றும் நோக்கில் என்டப்ரைஸ் எமிரேட்ஸ் (Enterprise Emirates) எனப்படும் சமூக நல தொழில் முனைவுத் திட்டம் ஒன்றினை வெற்றிகரமாகா சமர்ப்பித்தமைக்காக இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரித்தானிய தொழில் முனைவரும் கல்வியாளருமான ஜெஸீம் அப்துல் ஹமீட், ஐக்கிய அமீரகத்தில் இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பிசினஸ் எக்சலன்ஸ்’ Business Excellence Award (வியாபார மேம்பாட்டு) விருது வைபவத்துக்கு ஐக்கிய அமீரகத்தின் சுதந்திர வர்த்தக மற்றும் முதலீட்டுச்சசபையின் தவிசாளர் அதி மேதகு ஷேக் அஹ்மத் பின் அல் சகர் அல் காசிமி அவர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளார் .

Jazeem (6)இவ்விருது ஐக்கிய அமீரகத்தின் முன்னேற்றத்துக்கும் மேம்பாட்டுக்கும் பங்களிப்புச் செய்யும் தனியார் வர்த்தக நிறுவனங்களை மற்றும் சிறந்த திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. சிறந்த நிறுவனங்கள் மற்றும் திட்டங்கள் பலதரப்பட்ட நடுவர்களின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு வெற்றியாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

ஐக்கிய ராஜ்ஜியத்தை தலைமையகமாக கொண்டு செயட்படும் ஜஸாஹ் குழும கம்பெனிகளின் (Jazah Group) தவிசாளராகவும் தொழில் முயட்சியாளர்களுக்கான லண்டன் கல்லூரியின் (London School of Entrepreneurship- LondonSE ) பிரதான நிறைவேற்று பணிப்பாளராகவும் செயட்படும் ஜெஸீம் கடந்த நவம்பர் மாதம் ஐக்கிய ராஜ்ஜியத்தின் சிறந்த முன்னுதாரண பிரமுகராக பிரேரிக்கப்பட்டு இங்கிலாந்தில் நடைபெற்ற JCI சர்வேதேச அமைப்பின் வருடாந்த நிகழ்வில் TOYP UK AWARD (Ten Outstanding Young Persons- United Kingdom) டொயிப் விருது வழங்கியும் கௌரவிக்கப்பட்டார் .

Jazeem (5)இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையை பிறப்பிடமாக கொண்ட இவர் மர்ஹூம் அப்துல் ஹமீத் (ராசாதம்பி), ரஹ்மத் பீவி ஆகியோரின் கனிஷ்ட புதல்வரர் ஆவார். அத்துடன் கல்முனை ஸாஹிரா கல்லூரி மற்றும் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*