வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவர்களின் அவல நிலைக்கு தீர்வுதான் என்ன? Video

24

-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-

மட்டக்களப்பு மாவட்டம், மத்தி கல்வி வலயத்தில் உள்ள வாழைச்சேனை வை.அஹமட் ஆரம்ப பாடசாலையினை சுற்றியுள்ள பிரதான வீதி மழை காலங்களில் முற்றிலும் பாதிக்கப்படுவதினால் பாடசாலையில் கற்கின்ற ஆரம்ப பிரிவு மாணவர்கள் மிகவும் அசெளகரியங்களுக்கு உள்ளாகி வருகின்ற அவல நிலைமையினை மாவட்டத்து அரசியல் வாதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் அதற்கான தீர்வினை இன்னும் அவர்களினால் பெற்றுத்தர முடியவில்லை என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் லியாப்தீனும், வை.அஹமட் வித்தியாலய நிருவாகத்தினரும் கவலை தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக காணப்பட்டும் வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வை.அஹமட் பாடசாலை மாணவர்கள் மழைக்காலங்களில் பாடசாலைக்கு வர முடியாதவாறு பாடசாலையினை சுற்றியுள்ள பிரதான வீதிகள் நீரினால் மூழ்கடிக்கப்பட்டு வருகின்றது.

இதனை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், ஏனைய சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல் தலைமைகளிடம் எடுத்து கூறியும் இன்னும் அதற்கான தீர்வினை குறித்த அரசியல்வாதிகளினால் பெற்றுத்தர முடியாமலே இருந்து வருகின்றது.

அது மட்டுமல்லாமல் குறித்த பாடசாலைக்கு அருகாமையில் உள்ள ஆயிஷா பெண்கள் பாடசலைக்கு குறித்த வீதியானது பயன்படுத்தப்படுவதினால் அங்கு கல்வி கற்கின்ற பெண் மாணவிகளும் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அத்தோடு ஆரம்ப பாடசாலையாக இருக்கின்ற வை.அஹமட் பாடசாலையோடு இக்பால் சனசமுக நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருக்கின்ற பாலர் பாடசலையில் கல்வி பயிலும் முன்பள்ளி மாணவர்களும் இதே பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக பிரதேச சபை, மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அதிலும் தோல்வியடைந்துள்ள நிலையில், பிரதேச செயலகத்தில் இடம் பெறுகின்ற அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் இது சம்பந்தமாக தெரியப்படுத்தியும் குறித்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்க பெறவில்லை என தெரிவிக்கின்றனர். தமிழ் முஸ்லிம் சமுகங்களின் ஒன்றிணைந்த பிரதேச சபையாக இருகின்ற வாழைச்சேனை பிரதேச சபையும் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க தவறிவிட்டது என்பது ஒரு கருத்தாகவும் அமைகின்றது.

பிரதேசத்தில் அதிகளவாக வாக்குகளை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு காலாகாலமாக அளித்து வருகின்ற வாழைச்சேனை பிரதேசத்து மக்களின் சிறார்கள் கல்வி கற்கின்ற குறித்த வை.அஹமட் ஆரம்ப பாடசாலை அமைந்துள்ள வீதியானது இவ்வாறு முஸ்லிம் காங்கிரசினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல்வாதிகளினாலும், நிருவாக உத்தியோகத்தர்களினாலும் தொடர்ந் தேர்சியாக புறக்கணிக்கபட்டு வருகின்றமையானது மிகவும் மனவேதனை அளிக்கின்ற விடயமாக உள்ளது என தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர்

அத்தோடு குறித்த பாடசாலையினை சுற்றியுள்ள பிரதான வீதியினை கொங்ரீட் வீதியாகவும், அதனோடு சேர்த்து அதற்கான வடிகானினையும் அமைத்து அபிவிருத்தி செய்வதற்கு கிழக்கு மாகான முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதி அமைச்சர் அமீர் அலி, மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், பராளுமன்ற உறுப்னர் அலி ஷாஹிர் மெளலான, தமிழ் தேசிய கூடமைப்பின் பராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன், யோகேஸ்வரன், சிவனேசன், மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம் போன்றவர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டு வருவதாக பாடசாலை நிருவாகவும், சமூக நலன் விரும்பிகளும் வேண்டி நிற்கின்றனர்.

குறித்த பாடசலையினை சுற்றியுள்ள வீதிகளின் அவல நிலைமையினையும் , அதனோடு சேர்த்து பாதிப்படைந்துள்ள வடிகான்களின் நிலைமையினையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் வாதிகளினால் புறக்கணிக்கப்பட்டு வரும் விடயம் சம்பந்தமான விளக்கங்கள் அடங்கிய காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*