அமைச்சர் ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளுக்கு விஜயம்!

நீதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை பயணமானார்.

உலக முஸ்லிம் தலைமைத்துவப் பேரவை, லண்டன் மேபெயார் என்பன இணைந்து டார்மூத் ஹவுஸில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் ‘சிறுபான்மை சமூகமொன்றை வழிநடாத்துதல் – ஓர் இலங்கை அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் நாளை புதன்கிழமை சிறப்புரையை ஆற்றுவார்.

உலக முஸ்லிம் தலைமைத்துவ பேரவை இஸ்லாமிய உலகில் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி அண்மைக்காலமாக கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு முஸ்லிம் உலகிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையில் தொடர்பாடலை பொறுத்தவரை ஓர் இணைப்புப் பாலமாகவும் உள்ளது. அதன் ஐரோப்பிய செயலகம் லண்டன் நகரிலும், ஆசியச் செயலகம் மலேஷியாவில் கோலாலம்பூர் நகரிலும் அமைந்துள்ளன.

நியூயோர்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆலோசனை குழுவின் ஆறாவது அமர்விலும் இலங்கையின் சார்பில் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.

அடுத்த மாதம் ஆறாம் திகதி அவர் நாடு திரும்புவார் என்று ஊடக ஆலோசகர் டாக்டர் ஹாபிஸ் தெரிவித்துள்ளார்..

Subscribe to Comments RSS Feed in this post

3 Responses

  1. அவரது சிறப்புரையில், வீர வசனங்கள்,சொல் சிலம்பம் மூலம் வாக்குகளை குவித்து, பேரம் பேசல் எனும் மகுடி மூலம் அமைச்சு பதவிக்கு சோரம் போவது எப்படி என்பது பற்றியும் கருத்து சொல்வாரோ……..?

  2. Now he is going to ture to spend his free time until next election call.
    untill we get dicission this kind of politicians will continue their acting and pretending.poor pooralihal

  3. மு கா இவ்வாறான அமர்வுகளில் கலந்து கொள்வது மிகவும் வரவேற்கத்தக்கது, இருந்த போதிலும் உரையாற்றுபவர் தொடர்பாக ஒரு நல்ல அபிப்பிராயம் இன்று மக்கள் மத்தியில் இல்லை. அவர் வெளிப்படையானவர் என்றால் பேச இருக்கின்றவற்றின் சாரம்சத்தையாவது மக்களுடன் பகிர்ந்து கொல்வார? இதுவும் கூட ஒரு தனி நபர் ரவ்ப்ஹகீம் உக்குக் கிடைத்த சந்தர்ப்பமே தவிர இலங்கை முஸ்லிம்களுக்கானது அல்ல. யாரவது இதனை கவனிப்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*