விளையாட்டு மைதான அபிவிருத்திக்கு NFGG நடவடிக்கை; பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

NFGG- CHAIRMAN“காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களிலுள்ள சில தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) மேற்கொண்டுள்ளது” என அதன் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாலமுனை நெசனல் விளையாட்டு கழக மைதானத்தில் விளையாட்டுக் கழகத்தினரையும், பிரதேச பிரமுகர்களையும் சந்தித்து உரையாடிய போதே கொறியிலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார்.

காத்தான்குடியின் எல்லையில் அமைந்துள்ள சவுண்டஸ் விளையாட்டு மைதானம், பாலமுனை நெசனல் விளையாட்டு கழக மைதானம் மற்றும் காங்கேயனோடை அல்-அக்‌‌ஷா மைதானம் என்பவற்றை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த ஆண்டிலிருந்தே NFGG மேற்கொண்டு வருகிறது..

அந்த வகையில் அதற்கான திட்டமிடல்களும் செலவு மதிப்பீடுகளும் தற்போது உரிய தினைக்களங்களினால் ஆரம்பிக்ப்பட்டுள்ளன. அதுபோலவே ஏறாவூரில் அமைந்துள்ள மீரா காணி பொது விளையாட்டு மைதானத்தினையும் இவ்வாண்டில் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை NFGG தொடங்கியுள்ளது.

அந்த வகையில் பாலமுனை நெசனல் மைதானத்தின் தற்போதைய நிலமைகளை பார்வையிடுவதற்காகவும், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் முன்னேற்றங்களைப்பற்றி உரையாடுவதற்காகவும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அங்கு விஜயம் செய்திருந்தார்.

அங்கிருந்த விளையாட்டுக் கழக உறுப்பினர்களினதும் பிரமுகர்களினதும் கருத்துக்களைக் கேமட்டறிற்து கொண்ட அவர் எதிர்வரும் மார்ச், ஏப்ரல் மாதமளவில் இவ்வபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தாம் எதிர்பார்ர்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு பாலமுனை நெசனல் விளையாட்டுக் கழக வீரர்களின் உடனடித்தேவைகளில் ஒன்றான கழக வீரர்களுக்கான சீருடைகளையும் தமது சொந்த நிதியிலிருந்து உடனடியாக பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*