கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சுதந்திர தின வைபவம்!

KMC-ind-28

(அஸ்லம் எஸ்.மௌலானா)

இலங்கையின் 69ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையில் ஒழுங்கு செய்யப்பட நிகழ்வு இன்று சனிக்கிழமை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

மாநகர சபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இஸ்மாயில் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், பொறியியலாளர் ரி.சர்வானந்தன், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், நிதிப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் எம்.எம்.ஜௌபர், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அஹ்சன் உள்ளிட்ட அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.

மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைத்ததுடன், சுதந்திர தின உரையையும் நிகழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மாநகர சபை வளாகத்தில் சிரமதான நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

KMC ind (14)KMC ind (7) KMC ind (4) KMC ind (15) KMC ind (8) KMC ind (6) KMC ind (3) KMC ind (13) KMC ind (11) KMC ind (5) KMC ind (2) KMC ind (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*