4000 ரூபா கொடுப்பனவை அதிகரிப்பதற்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் இணைக்கவும் அமைச்சரவை அங்கிகாரம்!

IMG_5068

மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு 4000 ரூபா கொடுப்பனவு அதிகரிப்பதற்கும் பாடசாலைகளில் குறைபாடக இருக்கும் கணித¸ விஞ்ஞான ஆசிரியர் குறைபாட்டை தீர்க்க ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கவும் அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் தெரிவிக்கின்றார்.

கொட்டகலை ஆசிரியர் கலாசாலையின் 38 வது ஆண்டு விழாவும் இல்ல விளையாட்டு போட்;டியும் ஹட்டன் டன்பார் மைதானத்தில் அதிபர் திருமதி சந்திரலேகா கிங்ஸிலி தலைமையில் நடைபெற்ற போது. அதற்கு பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்த விளையாட்டு போட்டியில் கடமை¸ கன்னியம்¸ கட்டுபாடு என்ற ழூன்று இல்லங்களின் ஆசிரிய பயிலுனர்களின் உடற்பயிற்சி¸ ஓட்டங்கள்¸ அஞ்ச்லோட்டம்¸ மறியாதை அணிசகுப்பு¸ வினாத உடை போட்டி ஆகிய இடம் பெற்றதுடன் வெற்றி பெற்ற ஆசிரியர் பயிலுனர்களுக்கு சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கபட்டது. இதில் கடமை இல்லம் முதலாம் இடத்தை தட்டிக் கொண்டது.

தொடர்ந்து இங்கு கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்;

கடந்த காலங்களில் பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்னவு அதிகரிக்படவில்லை என்று பலர் பல்வேறு வகையிலும் குறிப்பாக முக புத்தகங்களிலும் பல்வேறுபட்ட விமர்சனஙடகளை முன் வைத்தனர். இது கிடைக்குமா கிடைக்காதா பேசிக்கிட்டு தான் போறிங்க ஒன்றுமே செய்யவில்லை என்று. ஆனால் இதற்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவது யாபரும் அறிந்த விடயம். அதன் படி இன்று (06) காலை அமைச்சின் செயலாளர் என்னிடம் தொடர்பு கொண்டு கூறினார்.

பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு கொடுப்பனவை அதிகரிப்பதற்கு அனைத்து அனுமதியும் கிடைத்துள்ளது. நிதி அமைச்சின் அனுமதி மாத்திரம் கிடைக்க வேண்டும் கிடைத்ததும் இவர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க முடியும் இந் வேலைத்திட்டத்தில் தொன்னூறு சதவீதமான வேலைகள் முடிவடைந்துள்ளது என்று.

அதேபோல் மலையத்தில் பாடசாலைகளில் குறிப்பாக தரம் உயர்த்தபட்ட உயர்தர 23 கணித விஞ்ஞான பாடசாலையிலும் ஏனைய உயர்தர கணித விஞ்ஞான பாடசாலைகளிலும் குறைபாடாக இருக்கும் கணித விஞ்ஞான ஆசிரியர்கள் குறைபாட்டை நீக்க ஓய்வு பெற்ற கணித விஞ்ஞான ஆசிரியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கும் அமைச்சவை அங்கிகாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அசிரியர்கள் இணைத்துக் கொள்ளும் சந்தர்பத்தில் மலையத்தின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும்.

இதற்கு இடையில் குறித்த காலத்திற்கு முன்னர் இந்த பாடசாலைகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை உறுவாக்க நடவடிக்கை மேற்க் கொள்ளப்படும். மலையத்தின் கல்வி மறுமலர்ச்சியில் நான் அக்கரையாக செயற்பட்டு வருகின்றேன். எதற்கும் பொருமை வேண்டும் எதையும் கூறியவுடன் நடத்திவிட முடியாது. அதற்கும் ஒரு சரியான நேரம் வரவேண்டும். இந்த பொருமைக்கு கிடைத்த வெற்றியே மேற்படி முக்கியமான இரண்டு விடயங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் கிடைத்தமை. தற்போத மலையத்தில் கல்வியின் வளர்ச்சி துரிதம் அடைந்து வருகின்றது.

இதற்கு அனைவரும் எந்த விதமான பேதமும் இன்றி செயற்பட வேண்டும். மலையத்தின் மாற்றம் கல்வி வளர்ச்சியிலேயே தங்கி உள்ளது. இன்று இந்த இல்ல விளையாட்டு போட்டியில் பங்கு கொள்ளும் அனைத்து ஆசிரியர் பயிளுனர்களும். தங்கள் பயிற்சியின் பின்னர். சழூக சிந்தனையுடன் செயற்பட்டு மலையத்தின் கல்வி மறுமலர்ச்சிக்கு கடமை¸ கன்னியம்¸ கட்டுபாடுடன் செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*