அல்-மிஸ்பாஹ் இல்ல விளையாட்டுப் போட்டி; பிரதம அதிதி ஹரீஸ்

2 (1)

(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்)

கமு. அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இறுதிநாள் நிகழ்வு அதிபர் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இன்று (15) புதன்கிழமை மாலை வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பதில் அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், விஷேட அதிதிகளாக உதவிக் கல்விப் பணிப்பாளர் – உடற்கல்வி ஏ.ஏ. சத்தார், ஓய்வுபெற்ற அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும் விளையாட்டுத்துறை ஆலோசகருமான எம். அப்துல் நபார், இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, ஏ.எம். றினோஸ், கல்முனை முஸ்லிம் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நீல நிற தாறுல் இல்மா, பச்சை நிற தாறுல் ஹிக்மா, சிவப்பு நிற தாறுல் நிஹ்மாஹ் ஆகிய இல்லங்களுக்கிடையே நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவித்து வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இல்லங்கள் பெறும் முதலிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி இல்லத்தை தெரிவு செய்யும் அடிப்படையில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்ற குறித்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அதி கூடிய முதலிடங்களைப் பெற்று முதலாமிடத்தை தாறுல் இல்மா இல்லமும், இரண்டாமிடத்தை தாறுல் ஹிக்மா இல்லமும் மூன்றாம் இடத்தை தாறுல் நிஹ்மா இல்லமும் பெற்றுக் கொண்டன.

IMG_4804IMG_4797 IMG_4795

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*