தந்தையும் மகனும் செலுத்திய வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இருவரும் பலி!

Jeffrey-Morris-Brasher-father-son

50 வயதான நபர் ஒருவர் செலுத்திச் சென்ற வாகனமும் அவரின் 22 வயதான மகன் செலுத்திய மற்றொரு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் இருவரும் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அலபாமா மாநிலத்தின் பெயேட் கவுன்ரியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 04.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக உள்ளூர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

50 வயதான ஜெப்ரி மொரிஸ் என்பவர் செலுத்திச் சென்ற பிக் அப் ரக வாகனமும், அவரின் மகனான அஸ்டின் பிளெய்ன் பிறேஷர் (22) செலுத்திச் சென்ற மற்றொரு பிக் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இவர்களில் எவரும் ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெப்ரி பிறேஷர் ஸ்தலத்திலேயே இறந்தார். அவரின் தந்தை வைத்தியசாலையில் காலை 9.18 மணயளவில் இறந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*