எடின்பரோ சர்வதேச தங்க விருதுக்கு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் றிஸான் தெரிவு!

கிழக்கின் வரலாற்றில் முதன் முறையாக எடின்பரோ சர்வதேச தங்க விருதுக்கு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிஸான் தெரிவு!Rizan

(அஸ்லம் எஸ்.மௌலானா)

பிரித்தானிய ‘எடின்பரோ கோமகன்’ சர்வதேச தங்க விருதுக்கு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.றிஸான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ள ‘எடின்பரோ கோமகன்’ சர்வதேச விருது வழங்கும் விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இவ்விருது வழங்கப்படவிருக்கிறது.

இளைஞர் ஆளுமை, ஆற்றல், சிறந்த தலைமைத்துவம், சர்வதேச தொடர்புகள் மற்றும் வெளிக்கள ஆய்வுகள் போன்ற துறைகளில் அதிதேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் இவ்விருதுத் திட்டத்தில் கிழக்கு மாகாண வரலாற்றில் முதன் முறையாக தங்க விருது பெறும் வாய்ப்பை இவர் பெற்றுள்ளார்.

‘எடின்பரோ கோமகன்’ சர்வதேச வெண்கல விருதை 2008ஆம் ஆண்டிலும் வெள்ளி விருதை 2014ஆம் ஆண்டிலும் பெற்றுக் கொண்ட ஏ.எல்.எம்.றிஸான், கொழும்பு பல்கலைகழகத்தில் வெளிவாரி பட்டபடிப்பு பீடத்தில் மனித உரிமைத்துறையில் உயர்கல்வி கற்று வருவதுடன் தென்கிழக்கு பல்கலைகழத்தில் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார்.

சாய்ந்தமது அல்ஹிலால் வித்தியாலயம் மற்றும் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர் கல்லூரியின் மாணவர் தவைராகவும், சாரணியத் குழுத்தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் சாரணியத்தில் வழங்கப்படும் அதியுயர் விருதான ஜனாதிபதி விருதினை 2006 ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார்.

சமூக சேவைகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்ற இவர் 2013 ஆம் ஆண்டு இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இளைஞர் பாராளுமன்றத்தின் சகவாழ்வு பிரதியமைச்சராக சிறப்பாக பணியாற்றி, இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் அவர்களின் மேம்பாட்டுக்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார். அதன் பயனாக சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவில் இம்முறை ‘எடின்பரோ கோமகன்’ சர்வதேச வெண்கல விருதை பெறுவதற்கு 56 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அம்பாரை மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக சீ.சீ.எப் எனும் நிறுவனத்தின் அனுசரணையுடன் சுமார் பதினாறு இலட்சம் ரூபா பெறுமதியான பாலர் பாடசாலை கட்டிடம் ஒன்றை சாய்ந்தமது அக்பர் பள்ளிவாசல் வளவில் அமைப்பதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டிருந்தார்.

இவர் சாய்ந்தமருது ஆதம்லெவ்வை, சித்தி உம்மா தம்பதியரின் இரண்டாவது புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*