அம்பாரை மாவட்ட தொலைபேசி வர்த்தகர் சங்கம் அங்குரார்ப்பணம்!

Phone trad0001

(யூ.கே. காலித்தீன் எம்.ஐ.எம்.றிஸ்வான்)

அம்பாறை மாவட்ட தொலைபேசி விற்பனையாளர்கள் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஒன்று கடந்த 03/03/2017 வெள்ளிக் கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது இக்ரா மொபைல் ஸ்தாபகர் யூ.எல்.சத்தார் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த தொலைத்தொடர்பு சாதனங்களை விற்பனை செய்யக்கூடிய, மற்றும் திருத்தங்களைச் செய்யக்கூடிய மற்றும் சேவைகளை வழங்கக்கூடிய வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவட்ட ரீதியான அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது,

தலைவர்: UL.Saththar- Jalal (IQRA Mobile Sainthamaruthu )

செயலாளர்: BM.Anasdeen ( Best Choice Akkaraipattu )

பொருளாளர்: SM Hassan ( Warranty Mobile, Maruthamunai )

பிரதித்தலைவர்: MMM Imthiyas ( Phone Den, Kalmunai )

உபதலைவர்: JMMS Rammarathu ( DMS Mobie, Ampara Malin )

ஊடக செயலாளர்: MIM Riswan ( Plus Com, Sainthamaruthu

உப செயலாளர்: MSM Siraj ( SMS Mobile, Sammanthurai )

அதேவேளை இக்கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்களையும் எதிர்காலத்தில் இந்த அமைப்பில் இணைத்து, சமூக சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்வது தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

Phonetrad0004 (1) Phonetrad0004

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*