குப்பை பிரச்சினையை தீர்க்கா விட்டால் ராஜினாமா செய்வாராம் மரிக்கார் எம்.பி.

sm-Marikar

கொலன்னாவ மீதொட்டமுல்லை, குப்பைமலை விவகாரத்துக்கு உரியவகையில் தீர்வினை பெற்றுகொடுக்காவிடின், அரசாங்கத்தில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்வேன் என்று, ஐக்கிய தேசியக்கட்சியின் எம்.பியான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இந்த குப்பை மலை தொடர்பில், பிரதேசவாசிகளினால் தொடர்ச்சியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. அதனை செயற்படுத்துவதற்கும் இங்கிருக்கின்ற அதிகாரிகள் சிலர் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*