எம்.எஸ்.ம‌ரிக்கார் ஆளும் க‌ட்சி உறுப்பின‌ராக‌ இருந்தும் கூட எதிர்க்க‌ட்சி உறுப்பின‌ர் போன்று ஊட‌க‌ங்க‌ளில் ம‌ட்டுமே பேசினார்..!

ர‌ணில் பிர‌த‌ம‌ராக‌ இருக்கும் நிலையில் மீதொட்ட‌முல்ல‌ ம‌க்க‌ள் குப்பைக்குள் புதையுண்ட‌மை க‌வ‌லைக்குரிய‌ விடயமாகும்..!

Mubarak-2

கொழும்பு மாவட்டத்தில் நான்கு ல‌ட்ச‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வாக்குக‌ளை பெற்ற‌ ர‌ணில் விக்ர‌ம‌சிங்ஹ‌ பிர‌த‌ம‌ராக‌ இருக்கும் நிலையில் மீதொட்ட‌முல்ல‌ ம‌க்க‌ள் குப்பைக்குள் புதையுண்ட‌மை க‌வ‌லைக்குரிய‌ விடயமாகும் என உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் மஜீத் மௌல‌வி தெரிவித்துள்ளார்.

இப்பிர‌தேச‌ ம‌க்க‌ளின் நாடாளும‌ன்ற‌ பிர‌திநிதியான‌ எம்.எஸ்.ம‌ரிக்கார் ஆளும் க‌ட்சி உறுப்பின‌ராக‌ இருந்தும் கூட இத‌ற்கான‌ அர‌ச‌ மட்டத்திலான செய‌ற்பாடு எத‌னையும் மேற்கொள்ளாமல் எதிர்க்க‌ட்சி உறுப்பின‌ர் போன்று ஊட‌க‌ங்க‌ளில் ம‌ட்டுமே பேசினார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே முபாற‌க் அப்துல் மஜீத் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“கொலொன்னாவை மீதொட்ட‌முல்ல‌ குப்பை அனர்த்தத்திற்கான முழுப் பொறுப்பையும் ஐ.தே.க‌. கட்சியும் அது சார்ந்த நல்லாட்சியுமே பொறுப்பேற்க‌ வேண்டும்.

மீதொட்ட‌முல்ல‌ குப்பை மேட்டை அக‌ற்றும்ப‌டி அப்பிர‌தேச‌ ம‌க்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ அர‌சை வேண்டிய‌துட‌ன் ஆர்ப்பாட்ட‌மும் செய்த‌ன‌ர்.
இப்பிர‌தேச‌ ம‌க்க‌ளின் பாராளும‌ன்ற‌ பிர‌திநிதியான‌ ம‌ரிக்கார் ஆளும் க‌ட்சி உறுப்பின‌ராக‌ இருந்தும் உரிய நடவடிக்கை எத‌னையும் மேற்கொள்ள‌வில்லை. மாறாக‌ ஒரு எதிர்க்க‌ட்சி உறுப்பின‌ர் போன்று ஊட‌க‌ங்க‌ளில் ம‌ட்டுமே பேசினார்.

கொழும்பு மாவட்ட ம‌க்க‌ள் குறிப்பாக‌ பின்த‌ங்கிய‌ ப‌குதி ம‌க்க‌ள் காலாகால‌மாக‌ ஐ.தே.வு.க்கே வாக்க‌ளித்து வ‌ருப‌வ‌ர்க‌ள். அதேவேளை ம‌ஹிந்த‌வுக்கு கொழும்பு மாவட்ட ம‌க்க‌ள் ப‌ர‌வ‌லாக‌ வாக்க‌ளிக்காத‌ வ‌ர‌லாறாக‌ இருந்தும், அவர் தனது ஆட்சியில் கொழும்பை ந‌வீன‌ம‌ய‌ப்ப‌டுத்தி, சுத்த‌ப்ப‌டுத்தி பாரிய‌ அபிவிருத்திக‌ளை முன்னெடுத்து வந்த நிலையில் அவை முற்றுப்பெற முன் அவரது அர‌சு க‌விழ்ந்த‌து.

கொழும்பில் நான்கு ல‌ட்ச‌த்துக்கு மேற்ப‌ட்ட‌ ம‌க்க‌ளின் வாக்குக‌ளை பெற்ற‌ ர‌ணில் விக்ர‌ம‌சிங்ஹ‌ பிர‌த‌ம‌ராக‌ இருக்கும் நிலையில் கொழும்பின் பின்த‌ங்கிய‌ ம‌க்க‌ள் விட‌ய‌த்தில் கடந்த இரு வ‌ருட‌ங்க‌ளிலும் உருப்ப‌டியான‌ ந‌ட‌வ‌டிக்கை எதனையும் எடுக்க‌வில்லை என்றே தெரிகிற‌து.

வெல்ல‌ம்பிட்டியில் வெள்ள‌த்தில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இந்த‌ அர‌சு ந‌டுத்தெருவில் விட்ட‌து போன்று மீதொட்ட‌முல்ல‌ ம‌க்க‌ளையும் கைவிடாம‌ல் அவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதுடன் இத்த‌கைய‌ அன‌ர்த்த‌ங்க‌ளுக்கு அர‌சின் க‌வ‌ன‌க்குறைவே காரணம் என்பதை ஏற்றுக்கொண்டு உட‌ன‌டியாக‌ இப்பிர‌ச்சினைக்கு அர‌சு ந‌ல்ல‌ தீர்வை காண‌ முன்வர வேண்டும் என‌ எமது உல‌மா க‌ட்சி கேட்டுக்கொள்கிற‌து” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*