மாத்தறையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் ஹக்கீம் விஜயம்

18767774_2020307721535899_3213629025642099648_n

(ஊடகப் பிரிவு)

மாத்தறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேரடி விஜயம் மேற்கொண்டார்.

வெலிப்பிட்டிய பள்ளிவாசல், அக்குரஸ்ஸ பள்ளிவாசல், மீதெல்லவல விகாரை, கொரதொட போதிருக்காராம விகாரை மற்றும் கொடப்பிட்டிய சாதாத் மகா வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, அவர்களுடைய தேவைகளை கேட்டறிந்த பின்னர் நிதியுதவிகளையும் வழங்கி வைத்தார்.

இதேவேளை, அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கமைய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அனர்த்த நிவாரண செயலணி மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிணறுகள் சுத்தம்செய்யப்பட்டு வருகின்றன.

இப்பணியில் ஈடுபடுவதற்காக யாழ்பாணம், கிளிநொச்சி, வவுனியா, குருநாகல் உள்ளிட்ட நாட்டின் நாலாபுறங்களில் இருந்தும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18814286_2020307888202549_2484489219756453257_n18814234_2020307724869232_579125925488045404_n 18813292_2020307968202541_3860197995805292138_n 18813358_2020308004869204_8874268728032957671_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*