கபூர் அன்வர் முயற்சியால் லீடர் அஷ்ரப் வித்தியாலயத்திற்கு சைக்கிள் தரிப்பிடம்

Parking (1)

(அஸ்லம் எஸ்.மௌலானா)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் கொள்கைத் திட்டமிடல் அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்திற்கு சைக்கிள் தரிப்பிடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அல்-மாஷ் விளையாட்டு கழகத்தின் செயலாளருமான ஏ.கபூர் அன்வர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜௌபர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப், பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ், பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.ஐ.உதுமாலெப்பை, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களான எப்.எம்.தில்ஷாத், இசட்.எம்.சாஜித், தொழில் அதிபர்களாக எம்.எம்.நியாஸ், சக்கி இர்பான் உட்பட மற்றும் பலரும் பங்கேற்றிருந்தனர்.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலய மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக வைப்பதற்கான தரிப்பிடம் ஒன்று நீண்ட காலத் தேவையாக இருப்பதாக அதிபர் இல்யாஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் அல்-மாஷ் விளையாட்டு கழகத்தின் செயலாளருமான ஏ.கபூர் அன்வர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக அங்கு சைக்கிள் தரிப்பிடம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Parking (2)Parking (4) Parking (3)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*