ஜிம்ஹானா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

19274869_792939150873635_3102927573488011172_n

கல்முனை ஜிம்ஹானா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நிகழ்வு நேற்று கல்முனை ஆசாத் பிளாஸா வரவேற்பு மண்டபத்தில் கழகத்தின் தலைவரும் பிரதி அதிபருமான ஜனாப் M.A.A.சலாம் தலைமையில் இடம்பெற்றது.

மெளலவி அல்ஹாபிழ் முஹம்மட் நசீர் இஜாஸ் அஹமட் அவர்களினால் கிராத் ஓதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் மெளலவி அல்ஹாபிழ் முஹம்மட் அப்லால் அபுல்பைஸ் அவர்களினால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் K.M.அப்துல் ரஸாக் (ஜவாத்), கல்முனை பொலீஸ் நிலைய தலைமைப்பொறுப்பதிகாரி K.J.S.ஜயநித்தி, பொலிஸ் பரிசோதகர் ஜனாப் M.வாஹிட், ஜிம்ஹானா விளையாட்டுக் கழகத்தின் சட்ட ஆலோசகரும் சட்டத்தரணியுமான A.M.றோசன் அக்தர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் M.தெளபிக், கழகத்தின் ஆயுட்கால செயலாளரும் சமுர்த்தி உத்தியோகத்தருமான ஜனாப் S.L.M.லாபிர், உப தலைவர் ஈ.எம்.சமீன், பொருளாளர் செயின் பாறுக், நிருவாக உறுப்பினர் A.W.M.றினோஸ் உட்பட பொலீஸ் உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், விளையாட்டுக் கழகம்களின் வீரர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

19420857_792939037540313_6737173144870883814_n19399266_792939394206944_3675430695227598074_n 19397152_792939427540274_2672164205175540269_n 19399446_792939357540281_2972983130387339682_n 19420540_792939294206954_1224646395846020836_n 19399595_792939254206958_3321228134694718720_n 19424134_792939457540271_200582216841016393_n 19366432_792939600873590_4044679430673915079_n 19424329_792939064206977_7577902809255926066_n 19274847_792939120873638_3012153820446810811_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*