வைத்தியசாலையை இணைத்து சாய்ந்தமருது மக்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்; பைசால் காசீம் அறிவிப்பு

சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்கப்படமாட்டாது என சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“மக்கள் பயன்பாடு குன்றிப்போய் இருக்கின்ற சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையினை தரமுயர்த்தி,இப்பிரதேச மக்களுக்கு பயனுள்ள வகையில் மாற்றியமைத்து தாருங்கள் என வைத்தியசாலை அபிவிருத்திக்க்குழு, பள்ளிவாயல் மராய்க்கார் சபை போன்றவை என்னை நேரில் வந்து பல தடவை வேண்டிக்கொண்டதற்கு இணங்க கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்ததான ஒரு என்பு முறிவு சிறப்பு விடுத்தி தொகுதியையும் அதற்கான கதிர்ப்படப்பிடிப்பு, சத்திர சிகிச்சை நிலையம் உட்பட ஏனைய உட்கட்டமைப்புக்களையும் உருவாக்க நான் நடவடிக்ககைகளை மேற்கொண்டேன்.

இதன் ஆரம்ப கட்டமாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிருவாகத்துடன் பேசி அவர்களது சம்மதத்தினை பெற்றதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயாளர், பணிப்பாளர் நாயகம் ஆகியோரது சம்மதத்தினையும் பெற்று மாகான சுகாதார பணிப்பாளருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்குரிய அனைத்து நடவடிக்கக்ளினையும் மேற்கொண்டிருந்தேன்.

இதற்கிடையில் சாய்ந்தமருது மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக முகநூல் மூலமாக அறியக்கிடைத்தது, குறிப்பாக சாய்ந்தமருது ஷூரா கவுன்சில் இதனை எதிர்ப்பதாக அறிந்தேன்.

எனக்கு மூன்று முறை வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த வைத்தியசாலை இணைப்பினை மேற்கொள்வதில்லை என தீர்மானித்து கிழக்கு மாகான சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்புவதற்கான கடிதத்தினையும் நிறுத்தி விட்டேன்.

இதன் பிறகு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் சாய்ந்தமருது வைத்தியசாலையினை இணைப்பது சம்பந்தமாக வெளியிடப்படுகின்ற எந்த செய்திக்கும் நான் பொறுப்பல்ல என்பதை எனது பொது மக்களுக்கு தெரிவித்து கொள்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*