கலாநிதி ஜெமீல் ஏற்பாட்டில் ஒலுவில் பிரதேசத்தில் இலவச மூக்கு கண்ணாடி விநியோகம்..!

(எம்.வை.அமீர்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர்- அமைச்சர் றிஷாத் பதியூதீனனுடைய பூரண அனுசரணையுடன் கலாநிதி ஏ.எம்.ஜெமீலினால் நடைமுறைப்படுத்தப்படும் 1000 மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக ஒலுவில் பிரதேசத்தில் 125 பேருக்கு மூக்கு கண்ணாடிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (2017-07-29 ஆம் திகதி) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒலுவில் முக்கியஸ்தர் ஏ.எல்.ஜப்பார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் ஒலுவில் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் அஷ்செய்க் முஸ்தபா, கலாநிதி ஜெமீலின் பிரத்தியோக செயலாளர் சி.எம்.முனாஸ், பொதுசன தொடர்பு அதிகாரி ஏ.எல்.முக்தார் (ஜஹான்) மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் செயலாளர் றாசீக் உள்ளிட்ட அதிதிகளும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

நிகவின்போது பல்வேறு விடயங்களில் திறமை காட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*