கிழக்கில் முதன்முறையாக சதுரங்க போட்டி!

(ஏ.எம்.றொஸான்)
Zahirian Knights சதுரங்கக் கழகத்தினால் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் 20-08-2017 (ஞாயிறு) அன்று தங்களது கழகத்தின் முதலாம் வருட நிறைவை முன்னிட்டு “Zahirian Knights chess championship” சுற்றுப்போட்டி கழகத்தின் தலைவர் A.A.M.அஷ்ஜத் அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.

5 சுற்றுக்களை கொண்ட இப்போட்டியானது காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றதுடன் இப்போட்டியில் சுமார் 50க்கு மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்திலேயே சதுரங்கத்திற்கான முதலாவது கழகம் Zahirian Knights என்பதும் இவ்வாறான ஒரு போட்டி நடைபெறுவது இதுவே முதன் முறை என்பதும் பெருமைக்குறிய விடயமாகும் இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிராவின் பழைய மாணவரும் கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் சிரேஸ்ட வைத்திய அதிகாரியுமான DR.A.A.M.அஷாட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இவர் ரஜரட்டை பல்கழைகலகத்தின் முன்னாள் சதுரங்க அணி வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கல்முனை ஸாஹிராவின் அதிபர் M.S.முஹம்மட் சிறப்பு அதிதியாகவும் அல்-அஷ்ஹர் பாடசாலையின் பிரதி அதிபர் M.A.சலாம் கௌரவ அத்தியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்போட்டியானது இரு பிரிவுகளில் நடைபெற்றதுடன் அதில் 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் A.S.A.முஜுவத்,19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் F.M.பமிஹாத் ஆகியோர் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கு வெற்றிக்கிண்ணம், தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன் பிரதம அதிதி தனது அன்பளிப்புக்களையும் வழங்கினார்.

மேலும் 2,3ம் இடங்களை பெற்ற வெற்றியாளர்களுக்கு வெற்றிபதக்கங்கள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*