சமய நல்லிணக்கமும ; சக வாழ்வூம் நிகழ்ச்சி திட்டம் கல்முனையில்..!

சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பின் (Inthernational Youth Alliance For Peace) அம்பாறைமாவட்ட செயற்குழுவின் ஏற்பாட்டில் அதன் இணைப்பாளர் ஏ.முஹம்மது றொஸான் அவர்களின் தலைமையில் British Council இன் ஒத்துழைப்புடன் Active Citizens நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு பகுதியாக 14.09.2017 ஆம் திகதி “சமயநல்லிணக்கமும் சகவாழ்வூம்” எனும் தொனிப்பொருளில் கல்முனை பிராந்தியத்தில் அனைத்து இன மாணவர்களும் கல்விக்கற்கின்ற இரண்டு பாடசாலைகளை மையப்படுத்தி செயலமர்வூத் தொடர்கள் மிக சிறப்புடன் நடாத்தப்பட்டன.

Active Citizen என்பது British Council இனால் நடாத்தப்பட்டதொரு உலகளாவிய நிகழ்ச்சித் திட்டமாகும். இதில் பொருள்படுவது யாதெனில் “உலகளாவிய ரீதியில் இணைக்கப்பட்ட மற்றும் உள்ளுர் ரீதியில் தொழிற்படும் நிகழ்ச்சி” என்பதாகும். உலகிலுள்ள மனிதர்கள் தமது சமூகத்தினுள் நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஏனைய அனைத்து கலாசாரங்களுடன் இணைந்து சமாதானமாக மற்றும் சிறப்பாக செயற்படுவதற்கு வலுவுட்டுதலே Active Citizen இன் பிரதான நோக்கமாகும். சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பானது இலங்கையில் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளைஞர்களை மையப்படுத்திய இலாபநோக்கமற்றதொரு தொண்டுசார் அமைப்பாகும்.

இலங்கையின் நிலையான சமாதானம் மற்றும் சமூகவிருத்திக்காக செயற்படும் இவ் அமைப்பு இளைஞர்களை வளவுவூட்டுதல் தொடர்பில் அதிகமான பங்களிப்பை இன்றுவரை மேற்கொண்டு வருகின்றது.

இவ் அமைப்பின் மாவட்டசெயற்குழுவினால் நடாத்தப்பட்ட மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் அமர்வூகல் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சமய அனுஷ்டானத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் முதலில் வளவாளராக கலந்துகொண்ட கல்முனை விகாராதிபதி ரண்முத்துக்கல ரங்கரெத்தின தேரர் அவர்கள் மாணவர்களுக்கு சமயங்கள் போதிக்கப்பட்ட விதம் சமய போதனைகள் உணர்த்தும் அம்சங்கள் மதங்களை எவ்வாறு மதிப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு மிகத் தெளிவான முறையில் விரிவூரையாற்றினார். மேலும் இவர் தமிழ் மொழியை பேசுகின்ற பௌத்த மத தேரர் என்றவகையில் மாணவர்களுக்கு சமயநல்லிணக்கம் தொடர்பான பல்வேறு விடயங்கள் பற்றிய அறிவினை பெற்றுக்கொள்ள முடிந்தது.

அவரது விரிவூரையைத் தொடர்ந்து சமாதானத்திற்கான சர்வதேச இளைஞர் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட  இணைப்பாளர் ஏ.முஹம்மதுறொஸான் அவர்கள் “தமது அமைப்பு தேசிய அளவில் செயற்பட்டு வருவதாகவூம்  இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகவூம்” தமதுஉரையில் குறிப்பிட்டார். மேலும் இந்நிகழ்ச்சித் திட்டம் குறுகியகாலத்திற்கு மட்டுமல்லாது நிலையானதொரு செயற்பாடாக இடம்பெற இருப்பதாகவூம் குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து இச் செயலமர்வில் கலந்துகொண்ட வளவாளராகிய சட்டத்தரணி என்.எம்.முஜீப் நளீமி அவர்களின் சிறப்புரையின் போது “சமயங்களில் போதிக்கப்பட்ட விடயங்களைத் தாண்டி வன்முறையை நோக்கி செயற்படும் ஒருவன் எந்த மதத்தவனாக இருந்தாலும் அவன் வன்முறையாளிதான்” எனக் குறிப்பிட்டமை இலங்கைச் சமூகங்களுக்கிடையில் சமய நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தின் தேவையை மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தது. இதன்போது அதில் பங்குபற்றிய மாணவர்களும் தமது சமய நல்லிணக்கம் சார்ந்த கருத்துக்களை பதிவிட்டமை சிறப்பாகும்.

விசேடமாககுறிப்பிடும் போது இதில் பங்குகொண்ட இரு வேறுபட்ட மதங்களை பின்பற்றும் மாணவர்கள் இருவரின் கருத்துப்படி “இலங்கையில் சமய நல்லிணக்கத்தை சரியான முறையில் ஏற்படுத்துவதற்கும் அதனைநிலைபெறச் செய்வதற்கும் சவால்கள் பலகாணப்பட்டாலும் அச்சவால்களை எதிர்கொண்டு மாணவர்கள் என்றவகையில் நாம் இலங்கையில் சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமூகங்களுக்கிடையில் சாதகமானதொரு மாற்றத்தை உருவாக்க ஒன்றுபடுவோம்” ஏன குறிப்பிட்டமை மாணவர்களுக்கிடையே காணப்பட்ட ஒருமைப்பாட்டை  தெளிவுபடுத்தியது. இச் செயலமர்வின் ஊடாக இளம் தலைமுறையினரின் தலைமைத்துவம் மதங்கள் பற்றிய புரிந்துணர்வூ தொடர்பாடல் சமூகபொறுப்பு தொண்டுசார் ஆர்வம் கூட்டாண்மை மற்றும் திறன்களை கட்டியெழுப்புவதற்கான வலைப்பின்னல் போன்ற சமூகத்தை மேம்படுத்தக்கூடிய பரந்துபட்ட திறன்கள் விருத்தியடைந்தமை சிறப்பாகும். எதிர்காலத்திலும் இவ்வாறானசெயலமர்வூகள் சமூகங்களுக்கிடையில் நடாத்தப்படுவது மதங்களுக்கிடையில் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைஉருவாக்க முக்கியமானதாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*