மும்பை ரயில் நிலையத்தில் வதந்தி; சன நெரிசலில் சிக்கி 30 பேர் பலி..!

மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் பரிதாபமாக பலியாயினர். கூட்டத்தில் மிதிபட்டு 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொடர் விடுமுறையால் மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் நேற்று முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது.

நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் 100 ரயில் சேவையை தொடங்கி வைக்க மும்பை சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*