இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம்..!

-யு எச்.ஹைதர் அலி-

சிறிலங்காவில் இந்த ஆண்டில் இதுவரையிலான 8மாத காலத்தில் 4 ஆயிரத்து 785 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது , கடந்த ஆண்டு 10,000 க்கும் அதிகமான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றது.

இலங்கை நான்கு மதங்களையும் மதங்கள் போதிக்கும் ஒழுக்க நெறிகளையும் சமூக விழுமியங்களையும் பின்பற்றும் மக்கள் வாழும் நாடு. சகல மத வழிபாட்டுத்தலங்களிலும் பாவச் செயல்களிலிருந்து எவ்வாறு பரிசுத்தமாக வாழ்வது என்ற போதனைகள் இடம்பெறத்தான் செய்கின்றன.

இருப்பினும், அப்போதனைகள் இன்றைய கால கட்டத்தில் சக்திமிக்கதாக மனித உள்ளங்களில் நிலை நிறுத்தப்படாதிருப்பதை வழி தவறி மேற்-கொள்ளப்படும் அருவருக்கத்தக்க செயல்கள் புடம்போட்டுக் காட்டுகின்றன.

மார்க்கம் பேசுபவர்களாலும், மார்க்கம் போதிக்க பாடசாலைகள் நடத்துபவர்களாலும், இந்த சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடருவதும், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கவும், உண்மையை மறைக்கவும், இந்த இயக்க பக்தர்களும் அரபு ரியல்களால் வயிறுவளர்க்கும் அமைப்புக்களும் , சர்வதேச பாடசாலை என்கின்ற பெயரில் கடை வைத்திருப்பவர்களும் போட்டி போட்டுக்கொண்டு முண்டியிடுவதை பார்க்கும் போது முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் இந்த சிறுவர் துஸ்பிரயோகம் வியாபித்திருக்கும் ஆழ அகலங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கையில் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வழிமுறைகளும் சட்டதிட்டங்களும் தண்டனைகளும் உருவாக்கப்பட்டுள்ளபோதிலும், பயிரை வேலி மேய்ந்த சம்பவங்களாக சில மௌலவிமார்களிடமும், அஷ்ஷேய்க்களிடமும் அவர்களது மனோ இச்சைப் பிடிக்குள் அகப்பட்டு தினமும் கருகிக் கொண்டிருக்கும் அரபு கலாசாலை மற்றும் அரபு மதரசா மாணவ மாணவியரும் விதி விலக்கணவர்கள் அல்ல. இப்படியான சம்பவங்களும் நாட்டில் இடம்பெறுவது துர்ப்பாக்கிய நிலை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

முஸ்லீம் சமூகத்தின் மத்தியில் இருக்கும் இரும்புத்திரைகள் மூலம் இவைகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்படுகின்றன, ஆங்காங்கே ஓரிறு விடயங்கள் வெளிவந்தாலும் அவர்களை காப்பாற்ற ஒரு கூட்டம், இவை அனைத்தயும் தாண்டி சமூகத்தின் மத்தியில் இருக்கும் அசிங்கங்களையும் அநீதிகளையும் வெளிக்கொண்டுவர முயட்சிக்கும் இளைஞர்களை மார்க்கத்துக்கு எதிரானவன் என்கின்ற முத்திரை குத்தி அடக்க முயலுகிறது இயக்க வெறியர்களின் இரும்புக்கரம்.

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய அறிவு ஒவ்வொரு தனிநபருக்கும் அவசியமாகவுள்ளது. சிறுவர்கள் துஷ்பிரயோகங்கள் இடம் பெறுவதற்கான காரணங்கள் எவை? துஷ்பிரயோகங்களிலிருந்து எவ்வாறு சிறுவர்களைப் பாதுகாக்க முடியும். போன்ற அறிவுடன் கூடியதான விழிப்புணர்வு இன்று ஒவ்வொரு தனி நபருக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது.

ஏனெனில் இன்று நமக்கு சொந்தமில்லாத ஒரு சிறுவன் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட செய்தி நாளை நமது சொந்த உறவான பிள்ளை துஷ்பிர-யோகத்திற்கு உட்பட்ட செய்தியாக வரலாம். அந்த நிலையிலிருந்து நமது சிறு¬வர்¬களைக் காப்¬பாற்ற வேண்டுமாயின் ஒவ்வொரு தனிநபரும் இவ்விடயம் தொடர்பில் விழிப்படைவது அவசியமாகும்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இடம் பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன என்றால் இதற்கான காரணம் என்ன வென்பதை மனித நேயமுள்ள ஒவ்வொருவரும் உணரக் கடைமைப்படுவது அவசியம். மதகுருக்கள் , ஆசிரியர்கள் , வைத்தியர்கள் என்கின்ற சொட் பதத்திற்குரிய அதீத நம்பிக்கையின் காரணமாக எம்மத்தியில் நாளுக்கு நாள் நித்யனந்தாக்கள் உலாவருகின்றார்கள்.

சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகாமல் அவர்களை பாதுகாப்பது குறித்த நடவடிக்கைகளை சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினரும் சமூகப் பணியாக உணர்ந்து செயலாற்றும்போது அப்பாவிச் சிறுவர்களை காமுகர்களிடமிருந்தும் கயவர்களிட மிருந்தும் நிச்சயம் பாதுகாக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*