ACMC வேட்பாளர் அன்வர் முஸ்தபா தேசிய காங்கிரஸில் இணைவு..! Video


(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டவரும் அக்கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழுள்ள நடா நிறுவனத்தின் பணிப்பாளருமான அன்வர் முஸ்தபா, முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டார்.

இது தொடர்பான ஊடக மாநாடு இன்று திங்கட்கிழமை இரவு கல்முனையில் நடைபெற்றது. இதன்போது தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா முன்னிலையில் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை, தேசிய காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ், கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வை METRO MIRROR TV நேரடி ஒளிபரப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Part-01

METRO Tv LivePart-01அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் அன்வர் முஸ்தபா, அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்ளும் ஊடக மாநாடு கல்முனையில் இருந்து நேரடி ஒளிபரப்புMETRO Tv Live

Posted by Metro Mirror on Monday, October 9, 2017

Part-02

METRO Tv LivePart-02அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் அன்வர் முஸ்தபா, அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்து கொள்ளும் ஊடக மாநாடு கல்முனையில் இருந்து நேரடி ஒளிபரப்புMETRO Tv Live

Posted by Metro Mirror on Monday, October 9, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*