ஏறாவூர் நகர சபை தேர்தலில் களமிறங்குகிறார் கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்..!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் எதிர்வரும் ஏறாவூர் நகர சபை தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏறாவூர் மக்களின் நலனை கருத்திற் கொண்டு முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் போட்டியிடவுள்ளார் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.வாசித் அலி தெரிவித்தார்.

இது தொடர்பான முடிவு திங்கட்கிழமை (9.10.2017) இரவு எடுக்கப்பட்டுள்ளது. ஏறாவூரின் அபிவிருத்தியை இலக்காக கொண்டும் ஏறாவூர் மக்களின் நலனை கருத்திற் கொண்டும் ஏறாவூர் நகர சபை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் போட்டியிடவுள்ளார்.

மக்களின் நலனுக்காகவும் மக்களோடு இருந்து மக்களுக்காக வேலை செய்யக் கூடிய எந்தவொரு அடிமட்ட பதவியாக இருந்தாலும் சரி அதை பொறுப்பெடுக்க ஆயத்தமாக முன்னாள் முதலமைச்சர் இருக்கின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஏறாவூரில் எந்த வட்டாரத்தில் போட்டியிடுவது போன்ற முடிவுகள் பின்னர் எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*