சாய்ந்தமருதில் சுனாமி ஒத்திகையும் விழிப்புணர்வும்..! Video

(எம்.வை.அமீர்)

சாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் இன்று 2017-11-05 ஆம் திகதி சுனாமி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள 78 சுனாமி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ள நிலையங்களில் இந்த ஒத்திகை நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒத்திகை நிகழ்வில் கிராம சேவை உத்தியோஸ்தர்களான எல்.நாஸர், ஏ.எம்.நிஸ்ரின் கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எப்.தில்ஸாத் அஹமட் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ இளைஞர் படையணி, கடற்படை வீரர்கள், கல்முனை பொலிஸார் விசேட அதிரப்படை வீரர்கள் அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிறுவன உத்தியோஸ்தர் உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுனாமி ஏற்பட்டு அதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டால் எவ்வாறு சுனாமி எச்சரிக்கை அபாய மணி ஒலி எழுப்பப்படும் என்றும் இதனை எவ்வாறு மக்கள் இனங்கண்டு விழிப்புடன் செயற்பட வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடவடிக்கையே இதுவாகும்.

சாய்ந்தமருதில் சுனாமி ஒத்திகை..Live telecastPart-02

Posted by Metro Mirror TV on Sunday, November 5, 2017

சாய்ந்தமருதில் சுனாமி ஒத்திகை..Live telecastPart-01

Posted by Metro Mirror TV on Sunday, November 5, 2017

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*