அம்பாறை மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்; கல்முனை மாநகர சபை உள்ளிட்ட 07 சபைகளுக்கு இல்லை..!

93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் 12 சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளன.

01. அக்கரைப்பற்று மாநகர சபை,
02. அக்கரைப்பற்று பிரதேச சபை,
03. அட்டாளைச்சேனை பிரதேச சபை,
04. லஹுகல பிரதேச சபை,
05. காரைதீவு பிரதேச சபை,
06. சம்மாந்துறை பிரதேச சபை
07. நாவிதன்வெளி பிரதேச சபை
08. இறக்காமம் பிரதேச சபை
09. ஆலையடிவேம்பு பிரதேச சபை
10. நாமல் ஓயா பிரதேச சபை
11. தெஹியத்தகண்டிய பிரதேச சபை
12. வாரியபொல பிரதேச சபை

அதேவேளை கல்முனை மாநகர சபை, அம்பாறை நகர சபை, நிந்தவூர், திருக்கோவில், பொத்துவில், உஹண, தமண ஆகிய பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடைபெற மாட்டாது.

இவை இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானிக்குள் அடங்குகின்றன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*