செய்தியில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்; மெட்ரோ மிரர் முகாமைத்துவ சபை அறிவித்தல்..!

“டிசம்பர் 12ஆம் திகதி வரை சாய்ந்தமருதில் போராட்டங்களுக்கு தடை” எனும் தலைப்பில் நேற்று 29ஆம் திகதி புதன்கிழமை நமது மெட்ரோ மிரர் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த சில தகவல்கள் தவறானவை என்று மெட்ரோ மிரர் முகாமைத்துவ சபைக்கு சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து அந்த செய்தியை முழுமையாக வாபஸ் வாங்கி-அகற்றியுள்ளோம் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.

குறித்த செய்தி காரணமாக சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக எமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

முகாமைத்துவ சபை
மெட்ரோ மிரர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*