எஸ்.யூ.கமர்ஜான் பீபி யார்த்த “நான் மூச்சயர்ந்த போது” நூல் வெளியீடு..!

எஸ்.யூ. கமர்ஜான் பீபீ (ஜே.பி) யார்த்த ”நான் மூச்சயர்ந்த போது” எனும் கவிதைத்தொகுதியின் வெளியீட்டு விழா 11 நவம்பர் 2017 சனிக்கிழமை பிற்பகல் 03.15 இற்கு வத்தளை ஹுணுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாலயத்தில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் நடைபெறும்.

வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளும் இவ்விழாவில் கௌரவ அதிதிகளாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸன் அலி, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மற்றும் சிறப்பதிதியாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன பிரதிப் பணிப்பாளர் யூ.எல். யாக்கூப் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஏறாவூர் பைஸானுல் மதீனா அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் மௌலவி அப்துர் ரஹீம் (நூரி) ஜே.பி முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் நூலின் முதற் பிரதியை தேசமானிய, புரவலர் அல்ஹாஜ் அப்துல் கையூம் பெறுவார்

விழாவின் தொடக்க உரை – கவிஞர் என். நஜ்முல் ஹுஸைன், நூல் ஆய்வு – சட்டத்தரணி எஸ்.எம்.என். மர்சூம் மௌலானா, கவி வாழ்த்து – மேமன்கவி நிகழ்த்தும் இவ்வைபவத்தின் தொகுப்புக்களை சிரேஷ்ட ஊடகவியலாளர் புர்கான் பீ இப்திகார் வழங்குவார். இவ்விழாவினை சாய்ந்தமருது, மருதம் கலை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருப்பதாக அதன் பொதுச் செயலாளர் எம்.எம்.எம்.நூறுல்ஹக் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*