கல்முனை மாநகர சபை ஊழியர்களின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு..!

கல்முனை மாநகர சபை ஊழியர்களின் புதுவருட சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் ஆணையாளரினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது, அதனை தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் அரச பணிக்கான சத்தியப்பிரமாணத்தை மொழிந்து உறுதி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன் ஆரம்ப உரையை நிகத்தியதுடன் ஆணையாளர் ஜே.லியாகத் அலி பிரதான உரையை நிகழ்த்தினார்.

இதன்போது அரச ஊழியர்களின் கடமை, பொறுப்புகள், ஒழுக்கம், கட்டுப்பாடு, ஒற்றுமை, கூட்டுப்பொறுப்பு போன்ற விடயங்கள் குறித்து ஆணையாளர் அறிவுரை வழங்கியதுடன் மாநகர சபையின் கடந்த ஆண்டுக்கான சொந்த வருமானம், வேலைத் திட்டங்கள், முயற்சிகள், எதிர்கால நடவடிக்கைகள், உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து அமையவுள்ள சபையின் வகிபாகம், சபா மண்டப ஒழுங்கமைப்பு, முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கான வசதிகளை விஸ்தரிப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஆணையாளர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*