வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலுக்கு வர மாட்டேன்; பிரதி அமைச்சர் ஹரீஸ் உறுதி..!

கல்முனையின் பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 1900 மில்லியன் ரூபா ஒதுக்கீடு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.வை.அமீர்)

கல்முனைத் தொகுதியின் அபிவிருத்தி பணிகள் உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு ஆரம்பிக்கப்படும். அவை எதிர்வரும் 2020 ஆண்டுக்குள் நிறைவடையும். அவற்றை நிறைவேற்றாமல் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதி தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் உறுதியளித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

கல்முனை மாநகர அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிப்பதற்கான முதற்க்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போதிருக்கும் நல்லாட்சிக்கு அதிஉச்ச ஆதரவை வழங்கிய கல்முனை மக்களை கௌரவிக்கும் நோக்கில் சம்மாந்துறை கல்முனை இணைந்த புதிய நகர அபிவிருத்தித் திட்டத்துக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீமின் அமைச்சுக்கு வரவுசெலவுத் திட்டத்தினூடாக 2000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு, மொரட்டுவ பல்கலைக்கழகத்தினூடாக திட்டங்கள் வரையப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் “இரண்டாம் நிலை நகரங்களின் நிலைத்தகு அபிவிருத்தித் திட்டத்தில்” எமது கல்முனை மாநகர சபையும் உள்வாங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அந்த வங்கியின் 1900 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் கல்முனையில் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்க்காக ஒத்துழைத்த உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, அந்த அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிரி, மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுதீன் ஆகியோருக்கும் இந்த திட்டத்தை இங்கு கொண்டு வர அயராது உழைத்த கல்முனை மாநகர ஆணையாளர் லியாக்கத் அலி மற்றும் அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அத்துடன் இதற்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் பிரதம செயலாளருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த திட்டத்தினூடாக

01. நகர மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்தல்.

02. போக்குவரத்து முகாமைத்துவம்.

03. நகர வடிகாலைமைப்புத் திட்டம்.

04. திண்மக்கழிவு முகாமைத்துவம்.

05. பொது கட்டிடங்களையும் சந்தைகளையும் மெருகூட்டுதல்.

06. சுற்றுலாத்துறையை மேன்படுத்துவதற்கான உட்கட்டமைப்புப் பணிகளை செய்தல்.

07. எமது மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகள், பாலங்களை அபிவிருத்தி செய்தல்.

08. குடியிருப்பு மற்றும் தொழில் நிலையங்களின் உட்கட்டமைப்பு.

09. கழிவு நீரகற்றல்

போன்ற அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தவிர அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்துப்பிரிவு ஒன்றை அமைப்பதற்க்கு 1400 மில்லியன் ரூபாய்களும் சாய்ந்தமருது மற்றும் மருதமுனை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்க்கும் சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதேவேளை கல்முனையில் அனைத்து வசதிகள் கொண்ட சர்வதேச மைதானமாக மாற்றும் திட்டத்தின்கீழ் சந்தாங்கேணி மைதானத்துக்கு 450 மில்லியன் ரூபாய்களும் சாய்ந்தமருது மைதானத்தை தேசிய விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வதுடன் மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டரங்கு உட்பட பாண்டிருப்பு மற்றும் நற்பட்டிமுனை போன்ற பிரதேசங்களிலுள்ள மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

அத்துடன் கிராமிய பாதைகளை அமைப்பதற்க்கு இரண்டு கோடி ரூபாய்களை பிரதமர் ஒதுக்கீடு செய்துள்ளத்துள்ளார்.

இன ஐக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப்பகுதிகளும் சமனான முறையில் அபிவிருத்திகள் செய்யப்படும். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தேசிய ஒருமைப்பாட்டு செயலகம் 120 மில்லியன் ரூபாய்கள் செலவில் மருதமுனை முதல் மாளிகைக்காடு வரை வீதிகள் புனரமைக்கப்படும்.

இவை அனைத்தும் நிறைவுற்றால் எமது கல்முனை மாநகரம் உட்பட அனைத்து பிரதேசங்களையும் மிக அழகிய தோற்றத்துடன் காண முடியும். அபிவிருத்தி தொடர்பான எனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நான் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான நகர்வை முன்னெடுக்க மாட்டேன்” என்றார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி, உள்ளூராட்சி உத்தியோகத்தர் தாரிக் சர்ஜூன், பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Live telecast Video

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்;கைகூடாமல் தவறிப் போனதெப்படி?விளக்குகிறார் பிரதி அமைச்சர் ஹரீஸ்..!Media ConferenceLive telecastFrom Kalmunai Municipal Council

Posted by Metro Mirror on Thursday, January 18, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*