ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்..!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸ அமெரிக்க பிரஜை என்பதால், ஜனாதிபதித் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாது.

அவர் எந்தவொரு காரணத்திற்காகவும் அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட விரும்பமாட்டார் எனவும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அறிந்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*