சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் க‌ல்முனை, ம‌ருத‌முனை உறவினர்களை ம‌யிலுக்கு வாக்க‌ளிக்க‌ செய்ய வேண்டும்..!

சாய்ந்த‌ம‌ருதுக்கு தனி உள்ளூராட்சி மன்றம் கிடைக்க‌ வேண்டுமாயின் சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ள் அந்த கோரிக்கைக்கு ஆத‌ர‌வான‌வ‌ர்க‌ளுக்கு வாக்க‌ளிப்ப‌துட‌ன் க‌ல்முனை, ம‌ருத‌முனை போன்ற‌ பிர‌தேச‌ங்க‌ளில் உள்ள‌ த‌ம‌து உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்களை ம‌யிலுக்கு வாக்க‌ளிக்க‌ச்செய்து க‌ல்முனையை முஸ்லிம் க‌ட்சி கைப்ப‌ற்ற‌ச்செய்தால் ம‌ட்டுமே சாய்ந்த‌ம‌ருது பிரிந்தால் க‌ல்முனையை முஸ்லிம்க‌ள் இழ‌க்க‌ மாட்டார்க‌ள் என்ற‌ ப‌ய‌ம் ஒழிந்து, ச‌பை மிக‌ இல‌குவாக‌ கிடைக்கும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

இது குறித்து அவ‌ர் மேலும் தெரிவிக்கையில்;

“முஸ்லிம் காங்கிர‌ஸ் ஒரு ஏமாற்றுக்க‌ட்சி என்று தெரிந்து கொண்டே அக்க‌ட்சியின் வாக்குறுதிக‌ளை ந‌ம்பிய‌மை சாய்ந்த‌ம‌ருது ம‌க்க‌ளின் த‌வ‌றாகும். அதேபோல் 2015ம் ஆண்டு ஹ‌க்கீம் ர‌ணிலை க‌ல்முனைக்கு அழைத்து வ‌ந்து சாய்ந்த‌ம‌ருதுக்கு பிர‌தேச‌ ச‌பை த‌ருவ‌தாக‌ கூறிய‌ போது க‌ல்முனை ம‌க்க‌ள் அந்த‌ இட‌த்திலேயே அத‌னை ம‌றுத்து, சாய்ந்த‌ம‌ருது பிரிந்தால் க‌ல்முனையை முஸ்லிம்க‌ள் இழ‌க்க‌ வேண்டி வ‌ரும் என‌ சொல்லியிருக்க‌ வேண்டும். அவ்வாறு சொல்லாம‌ல் ர‌ணிலின் வாக்குறுதிக்கு இவ‌ர்க‌ளும் சேர்ந்து கைத‌ட்டி விட்டு பின்ன‌ர் அத‌னை எதிர்த்த‌த‌ன் மூல‌ம் இவ‌ர்க‌ளும் த‌வ‌று செய்துள்ள‌ன‌ர்.

சாய்ந்த‌ம‌ருதுக்கு ச‌பை என்ப‌தை பிச்சைக்கார‌னின் கைப்புண் போல் முஸ்லிம் காங்கிர‌ஸ் வைத்துக்கொண்டு அம்ம‌க்க‌ளை ஏமாற்றிய‌ போது அம்ம‌க்க‌ள் அமைச்ச‌ர் ரிசாதிட‌ம் சென்று த‌ம‌து ச‌பை கோரிக்கைக்கு உத‌வும் ப‌டி கோரின‌ர். அவ‌ரும் இத‌ற்காக‌ முய‌ற்சி செய்து ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ அமைச்ச‌ரையும் சாய்ந்த‌ம‌ருதுக்கு அழைத்து வ‌ந்து இத‌னை உறுதிப்ப‌டுத்தினார்.

எதையும் தாம‌த‌மாக‌ புரிந்து கொள்ளும் க‌ல்முனை முஸ்லிம் காங்கிர‌ஸ் ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அமைச்ச‌ர் ரிசாதைக்க‌ண்டு சாய்ந்த‌ம‌ருது பிரிந்தால் க‌ல்முனைக்கு ஆப‌த்து என்ப‌தை விள‌க்கின‌ர்.

அமைச்ச‌ர் ரிசாத் ஒரு பிர‌தேச‌த்துக்கு ம‌ட்டுமான‌ த‌லைவ‌ர் அல்ல‌ என்ப‌தால் க‌ல்முனை ம‌க்க‌ளின் நியாய‌மான‌ கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டார்.
சாய்ந்த‌ம‌ருது பிரிந்தால் க‌ல்முனை மாந‌க‌ர‌ம் முஸ்லிம்க‌ளின் கையிலிருந்து ப‌றிபோகும் என்ப‌தும் நியாய‌மான‌ ப‌ய‌ம்தான். இப்ப‌ய‌த்தை போக்கும் பொறுப்பு சாய்ந்த‌ம‌ருதின் கையிலேயே உள்ள‌து. இத‌னை தேர்த‌ல் ஒன்றின் மூல‌ம் அம்மக்க‌ள் நிரூபிக்க‌ வேண்டும் என்ப‌தை உல‌மா க‌ட்சி ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ சொல்லி வ‌ருகிற‌து” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*