கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு..!

(அகமட் எஸ்.முகைடீன்)

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை தேசிய கொடியேற்றும் நிகழ்வும் விஷேட துஆப் பிரார்த்தனையும் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைர் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் கல்முனை வேட்பாளர்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், உலமாக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது நௌபர் அமீன் மௌலவியினால் விஷேட துஆப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.

Click for More Pictures

கல்முனை முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் சுதந்திர தின நிகழ்வு…

Posted by Metro Mirror on Monday, February 5, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*