பொன்னம்பலத்தின் சைக்கிளில் வந்தவர் மைத்திரியின் கையில் ஏறினார்..!

வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு போட்டியிட தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் நவரட்ணம் ஆனந்தன் ஆதரவாளர்கள் சகிதம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து உள்ளார்.

இவர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளரும், ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு கைச்சின்னத்தில் போட்டியிடுகின்ற தலைமை வேட்பாளருமான இப்பிரதேச சபையின் முன்னாள் எதிர் கட்சி தலைவர் கணேசபிள்ளை ரகுபதியை நேரில் சந்தித்து ஆதரவை வெளிப்படுத்தினார்.

இருவரும் சேர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஆலையடிவேம்பில் விசேட ஊடகவியலாளர் மாநாடு நடத்தினார்கள்.

இங்கு அமைப்பாளர் கணேசபிள்ளை ரகுபதி பேசுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நம்பிக்கை வேட்பாளர்களில் ஒருவராக இருந்த ஆனந்தன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொண்டமை மகிழ்ச்சி தருகின்றது, இது தேர்தலுக்கு முன்பாக கை சின்னத்துக்கு கிடைத்த வெற்றியாக இருப்பதுடன் எதிர்காலத்தில் கிடைக்க உள்ள வெற்றியையும் கட்டியம் கூறுகின்றது என்றார்.

ஆனந்தன் இங்கு பேசுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளால் தமிழ் மக்களுக்கான உரிமையையும் சரி, அபிவிருத்தியையும் சரி பெற்று கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தவராகவே நல்லாட்சியின் நாயகர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து உள்ளார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*