ஆசாத் சாலி மீது விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இருந்தாலும் கொழும்பு முஸ்லிம்கள் அவரையே ஆதரிக்க வேண்டும்..!

கொழும்பு முஸ்லிம்க‌ள் வெற்றிலைக்கு வாக்களித்து முஸ்லிம் ஒருவரை மேயராக்க வேண்டும்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொழும்பு முஸ்லிம்க‌ள் அனைவரும் ஜ‌னாதிப‌தி மைத்திரி த‌லைமையிலான‌ வெற்றிலைச் சின்ன‌த்துக்கு வாக்களித்து முஸ்லிம் ஒருவரை கொழும்பு மாநகர மேயராக்க முன்வர வேண்டும் என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இஸ்லாமிய‌வாதிக‌ள் தேர்த‌ல்க‌ளில் போட்டியிட்டு அர‌சு மூல‌ம் ம‌க்க‌ளுக்கு சேவை செய்ய‌ முன் வ‌ர‌ வேண்டும் என்ப‌தே எம‌து இல‌க்காகும். இத‌ற்கான‌ வ‌ழிகாட்ட‌லை நாமே செய்து வ‌ருகின்றோம். ஆனாலும் இஸ்லாம் ம‌ற்றும் ச‌மூக‌ம் ப‌ற்றிய‌ அறிவுள்ள‌வ‌ர்க‌ள், அக்க‌றையுள்ள‌வ‌ர்க‌ள் இன்ன‌மும் அரசியலுக்கு வராமல் பார்வையாள‌ர்க‌ளாக‌வே உள்ள‌ன‌ர்.

இந்நிலையில் க‌ட‌லில் த‌த்த‌ளிக்கும் ம‌னித‌ர்க‌ளை க‌ரை சேர்க்க‌ க‌ப்ப‌லை எதிர் பார்த்து அவ‌ர்க‌ளை மூழ்க‌டிப்ப‌தை விட‌ ஒரு தோணியையாவ‌து அடைடாள‌ம் காட்ட‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே இன்றைய‌ நிலையில் எம‌து அர‌சிய‌ல் வ‌ழி காட்ட‌ல் உள்ள‌து.

இந்த‌ வ‌கையில் இத்தேர்த‌லில் ஜ‌னாதிப‌தி மைத்திரியினால் கொழும்பு மேய‌ர் வேட்பாள‌ராக‌ க‌ள‌மிற‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஆசாத் சாலி மீது பல‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள், த‌வ‌றுக‌ள் இருப்பினும் ந‌ம்ம‌வ‌ர் என‌ க‌ருத்திற்கொண்டு றோசி சேனநாயக்கவை விட‌ ஆசாத் சாலியை ஆத‌ரிக்க‌ வேண்டிய‌ நிலையில் கொழும்பு முஸ்லிம்க‌ள் உள்ள‌ன‌ர். ஏன் என்றால் என்னதான் இருந்தாலும் ஆஸாத் சாலி ஒரு முஸ்லிம் ஆண் என்பதுடன் ஜ‌னாதிப‌தியின் ஆத‌ர‌வு அவ‌ருக்கு உண்டு என்ப‌தால் கொழும்பை வ‌ள‌ப்ப‌டுத்த‌ அவ‌ரால் முடியும். அத்துடன் கொழும்பு முஸ்லிம்களின் வாழ்வு சிற‌க்க‌ அவர் முன்னின்று உழைப்பார் எனவும் நம்பலாம்.

ஆஸாத் சாலி மேய‌ராக‌ வ‌ர‌ வேண்டுமாயின் கொழும்பு மாந‌க‌ர‌ ச‌பை எல்லைக்குள் உள்ள‌ அனைத்து வ‌ட்டார‌ங்க‌ளிலும் ஜ‌னாதிப‌தி மைத்திரி த‌லைமையிலான‌ வெற்றிலைச்சின்ன‌த்துக்கே முஸ்லிம்க‌ள் வாக்க‌ளிக்க‌ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*