அம்பாறையில் பூமியதிர்வு தொடர்கிறது; கிழக்கு மக்கள் அச்சம்!

News round up_CIஅம்பாறை மாவட்டத்தில் சில பிரதேசங்களில் தொடர்ந்தும் பூமியதிர்வு இடம்பெற்று வருகின்றது. இதனால் கிழக்கு மாகாண மக்கள் பெரும் அச்சமடைந்து காணப்படுகின்றனர்.
அதேவேளை இந்த பூமியதிர்வுகளுக்கு காரணமான வலயம் மாதுருஓய வனாந்தரத்தில் இருப்பதாக தாம் கணிப்பிட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க அகழ்வு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக அம்பாறை மாவட்டத்தின் வடினாகல, தேவாலஹிந்த, தமன போன்ற பிரதேசங்களில் 28 தடவைகள் பூமியதிர்வுகள் உணரப்பட்டிருந்தன.

அவற்றில் 10 அதிர்வுகள் அம்பாறை மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நடமாடும் புவியதிர்வு கணிப்பு கருவிகளில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இதன்போது அதிகூடிய பூமியதிர்வு சராசரியாக 2.9 ரிக்டர் அளவுகோளில் பதிவாகியிருந்தது.

பகல் வேளையிலேயே அதிகளவான நில அதிர்வுகள் உணரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*