வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வயிற்றோட்டம், தொற்று நோய்கள் பரவும் அபாயம்!

health-ministry-2மழை மற்றும் வெள்ளம் காரணமாக பாதிப்புக்குள்ளான பிரதேசங்களில் வயிற்றோட்டம் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

வயிட்றோட்டம் மற்றும் தொற்று நோய்களினால் பாதிப்புக்குள்ளான பலர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நோயளர்களுக்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ள இடங்களிலும் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வெள்ள நீர் வற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள கிணறுகளிற்கு குளோரின் இடும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*