அலி சப்றிக்கு அமை்ச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு கிடைக்கும்; தனசிரி அமரதுங்க தெரிவிப்பு!

 அலி சப்றிக்கு அமை்ச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு கிடைக்கும்; தனசிரி அமரதுங்க தெரிவிப்பு!

-அஸ்ரப் ஏ சமத்-

ராஜபக்ச குடும்பம் ஜனாதிபதி சட்டத்தரணிஅலி சப்றிக்கு கடமைப்பட்டுள்ளது. அவா் கடந்த 14 வருடங்களாக இவா்களது பல வழக்குகளில் ஆஜராகி ஒரு சதமேனும் அறவிடாது ஆஜராகி வந்தாா்.

எத்தனையே பிரபல்யமான சட்டத்தரணிகள் இருந்தும் நம்பிக்கையானவா் ஜனாதிபதி கோட்டபாய ஜனாதிபதி தோ்தல் கேட்கும்போது எதிரனியினா் அவரை அமேரிக்க பிரஜை என வழக்கு தாக்கல் செய்தனா்  அந்த வழக்கினை வாதாடி வெற்றி வாகையை எடுத்துக் கொடுத்தவா் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியாகும்.

ஏனைய சில முஸ்லிம் அரசியல் தலைவா்கள் போன்று அவா் ஒரு போதும்  விலைபோகாதவா்  அலி சப்றி –  அவருக்கு  எதிா்காலத்தில் பிரதியமைச்சரோ அல்லது ஒர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் கிடைக்கும் நாங்களும் அவா் பின்னால் இருந்து சேவை செய்வதற்கு  தங்களது வாக்குகளை அளியுங்கள் . என தெகிவளை கல்கிசை முன்னாள் மேயா் தனசிரி அமரதுங்க உரையாற்றினாா்.

நேற்று 26ஆம் திகதி  தெகிவளை சகரான் வரவேற்பு மண்டபத்தில் தெகிவளை பள்ளிவாசல் சம்மேளனம் இஸ்மாயில் காஜி ஏற்பாடு செய்த  கூட்டத்தில் தெகிவளை கல்கிசை முன்னாள் மேயரும் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான  தனசிறி அமரதுங்க  மேற்கண்டவாறு உரையாற்றினாா்.

அவா் தொடா்ந்து அங்கு உரையாற்றுகையில் -கடந்த பாராளுமன்றத் தோ்தலிலும் நானும்  தோ்தலில் போட்டியிட்டேன்  எனக்கு போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. தெகிவளை கல்கிசை வாழும் முஸ்லிம் கள்  எனக்கு வாக்களிக்க வில்லை தெகிவளை கல்கிசை ரத்மலானைப் பிர தேசத்தில் 30 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட முஸ்லிம் வாக்குகள் உள்ளன. நகர சபையில் கூட 5க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாநகர சபை உறுப்பிணா்கள் உள்ளனர். நான் என்றும் முஸ்லிம்களது நன்பன். நான் மேயராக இருந்த காலத்தில் இங்குள்ள பள்ளிவாசல்கள் தலைவா்கள் நோலிமிட் முபராக் காஜி, யுசுப் காஜி, முஸ்லிம் சலாகுதீன் காஜி, கோல் கேட்டறிங் சப்றி காஜி, நவாஸ் முஸ்தபா ,  சகரான் மண்டபத்தில் உரிமையாளா் புதவல்வா், மாநகர சபை உறுப்பினா்  சரினா ஆசிரியை  மற்றும்  கமீட் ஆகியோா்களும் இந்த கூட்டத்திற்கு   வருகை தந்துள்ளாா்கள். நான் மேயராக இருந்த காலத்தில் தான் கொழும்பு மநாகர சபை மேயராக உமா் காமில் இருந்தாா். நான் இன்றும் அவரை” சேர் ”சொல்லும் ஓரே ஒரு மேயா் அவரிடமிருந்து தான் மாநகர சபை ஒன்றை எவ்வாறு நிர்வகிப்பது பற்றி  கற்றுக் கொண்டேன், அவா் அடிக்கடி எனக்கு ஆலோசனை வழங்குவாா். ஜனாதிபதி சட்டத்தரனி ராசிக் சறுக் அவா்கள் இங்கு ஆற்றிய உரை மிகவும் என்னைக் கவா்ந்தது.

 இவ்வாறு தெகிவளை கல்கிசையில் முஸ்லிம்கள் எவ்வித குழப்பமும் இன்றி ஒரு அமைதியான சுழ்நிலையில் வாழ்வதற்கான ஒரு பிரதேசம் எனது மாநகர முதல்வா் காலத்தில் இப்பிரதேச வாழ் முஸ்லிம்களோடு நண்பனாக பழகி வந்தேன். என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவா் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவா்கள். நான் அவா்கள் பதவி இல்லாதபோது அவா் காலடியில்தான் இருந்தேன். எனக்கு பதவியோ அரசியல் அங்கிகாரம் இல்லாவிட்டாலும் நான் ராஜபக்ச குடும்பத்துடனேயே இறுதிவரை இருப்பேன்.  நான்  இம்முறையும் தெகிவளை கல்கிசை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் என்னை ஆதரிக்காவிட்டாலும் எனது நட்பு ஒருபோதும் குறையாது. கடந்த முறை எனது வீட்டில் நோன்பு திறக்கும் வைபவம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். எனது சக மாநகர முஸ்லிம உறுப்பிணா்கள்   உதவினாா்கள். அதனை எனது வீட்டில் ஏற்பாடு செய்தபோது எம்மவா் சிலா் என்னை குறை கூறினாா்கள். என்னிடம் மதவாதம் இனவாதம் இல்லை. சகலரது பிரச்சினைகளிலும் முன்னின்று என்னாள் உதவக்கூடிய சகலதையும் நான் தொடா்ந்து செய்வேன். என தனசிறி அங்கு உரையாற்றினாா்.

ஜனாதிபதி சட்டத்தரனி ராசீக் சருக் தனது  உரையில்  ”முன்னாள் அமைச்சா்கள் எம்.எச்.முகம்மத், ஏ.சி.எஸ் கமீத், அபுசாலி பாக்கீா் மா்க்காா். பதியுத்தீன் மக்மூத்  போன்றவா்கள் சிங்கள மக்களாலும் முஸ்லிம்கள் மத்தியிலும் இன.மத,கடசி வேறுபாடின்றி   நீண்டஅரசியல் தலைவா்களாக  இருந்து வந்தாா்கள்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை காலம் சென்ற  அஸ்ரப் ஆரம்பித்த பின்பு தான் பெள்த்த மக்களுக்கும்  முஸ்லிம் மக்களும் பிரித்தாழ பட்டாா்கள். அதனையே அவருக்கு பின்னால் வந்த தலைமைகளை தொடா்கின்றனா்.நாம் அவ்வாறு இல்லாமல் சிங்கள தமிழ் முஸ்லிம் என்ற வித்தியாசம் இன்றி தேசிய கட்சிகள் ஊடாகத்தான் நமது பிரச்சினைகளை சிங்களத் தலைவா்களிடம் பேசி அடைதல்  வேண்டும்.  அதன் பிறகுதான் முஸ்லிம்களது கோட்டல்கள்களில்  சமைக்கும்   கொத்து ரொட்டி, பெண்கள் அனியும் கீழ் ஆடையும் அனியாது முஸ்லிம்களை சந்தேகம் கொண்டாா்கள.

ஜனாதிபதி சட்டத்தரனி – அலி சப்றி –    உலகில் கொரோனா தொற்று நோய் ஏற்பட்டபோது ஜனாதிபதி கோட்டபாய அதனை கட்டுப்படுத்த எடுத்துக் கொண்ட ஆலோசனைகள் உலகத் தலைவா்கள் பாராட்டுகின்றனா். அவரிடம் இந்தியா, அவுஸ்த்திரேலியா பாக்கிஸ்தான் ஆலோசனை கேட்கின்றனா். அவா் ஜனவரி மாதம் முதலே பாதுகாப்புப்படையினரிடம் இதனை ஈடுபடுத்தினாா். தற்பொழுது தான் இந்தியா அவுஸ்த்திரேலியா அமுல்படுத்த ஆலோசிக்கின்றது.  தெகிவளை முன்னாள் மேயா் நல்ல மனிதா். அவருக்கு உங்கள் வாக்கில் ஒன்றை அளித்து உங்களது பிரதேசத்தில் அவரை பாராளுமன்ற உறுப்பிணராகுவதற்கு உதவுமாறு வேண்டிக் கொண்டாா். முன்னாள் மேயா் உமா் காமில் முன்னாள் மாகாண சபை உறுப்பிணா் உவைஸ் காஜியும்  இங்கு  உரையாற்றினாா்கள்

0 Reviews

Related post