இந்தியாவில் இம்மாதத்தில் மட்டும் 282 ஆயிரம் பேர் வைரசால் பாதிப்பு!

 இந்தியாவில் இம்மாதத்தில் மட்டும் 282 ஆயிரம் பேர் வைரசால் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 6 நாள்களாக தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20ஆம்

திகதி 14,516 பேருக்கும், 21 ஆம் திகதி 15,413 பேருக்கும், 22 ஆம் திகதி 14,821 பேருக்கும், 23 ஆம் திகதி 14,933 பேருக்கும், 24 ஆம் திகதி 15,968 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத

அளவில் 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 922 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் இந்த 6 நாள்களில் மொத்தம் 92 ஆயிரத்து 573 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி

உள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.82  இலட்சமாக உயர்ந்து இருக்கிறது.

புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களுடன் சேர்ந்து நாட்டில் கொரோனாவால்

பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக அதிகரித்து இருக்கிறது. இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 1  இலட்சத்து 40 ஆயிரத்து 900 பேருக்கு தொற்று

உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் 70 ஆயிரத்து 977 பேரும், டெல்லியில் 70 ஆயிரத்து 390 பேரும், குஜராத்தில் 28 ஆயிரத்து 943 பேரும், உத்தரபிரதேசத்தில் 10 ஆயிரத்து 557 பேரும்,

ராஜஸ்தானில் 16 ஆயிரத்து 9 பேரும், மேற்குவங்காளத்தில் 15 ஆயிரத்து 173 பேரும், மத்தியபிரதேசத்தில் 12 ஆயிரத்து 448 பேரும், அரியானாவில் 12 ஆயிரத்து 10 பேரும்,

தெலுங்கானாவில் 10 ஆயிரத்து 444 பேரும், ஆந்திராவில் 10 ஆயிரத்து 331 பேரும், கர்நாடகாவில் 10 ஆயிரத்து 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் 8,209, ஜம்மு காஷ்மீரில் 6,422, அசாமில் 6,198, ஒடிசாவில் 5,752, பஞ்சாபில் 4,627, கேரளாவில் 3,603, உத்தரகாண்டில் 2,623, சத்தீஸ்காரில் 2,419, ஜார்கண்டில் 2,207, திரிபுராவில் 1,259 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன்

பிரதேசங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழேயே இருக்கிறது. மராட்டியத்தில் 208, டெல்லியில் 64, தமிழகம் 33, குஜராத் 25, கர்நாடகா 14, மேற்குவங்காளம் 11, ராஜஸ்தான் மற்றும்

அரியானாவில் 10, மத்தியபிரதேசம் 9, உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 8, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உத்தரகாண்டில் தலா 5, பீகார், கோவா, ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் என 24 மணி நேரத்தில் மொத்தம் 418 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

புதிதாக உயிரிழந்த 418 பேருடன் சேர்ந்து நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆக உயர்ந்து இருக்கிறது.

இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 6,739 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளது. மற்ற

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அடைப்புக் குறிக்குள் வருமாறு:- டெல்லி (2,365), குஜராத் (1,735), தமிழ்நாடு (911),

உத்தரபிரதேசம் (596), மேற்கு வங்காளம் (591), மத்தியபிரதேசம் (534), ராஜஸ்தான் (375), தெலுங்கானா (225), அரியானா (188), கர்நாடகா (164), ஆந்திரா (124), பஞ்சாப் (113), ஜம்மு காஷ்மீர்

(88), பீகார் (57), உத்தரகாண்ட் (35), கேரளா (22), ஒடிசா (17), சத்தீஸ்கார் (12), ஜார்கண்ட் (11), அசாம் (9), புதுச்சேரி (9), இமாசலபிரதேசம் (8), சண்டிகார் (6), கோவா (2), மேகாலயா (1), லடாக் (1), திரிபுரா (1).

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 4¾ லட்சம் பேரில், 2 இலட்சத்து 71 ஆயிரத்து 697 பேர் ஆஸ்பத்திரியில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி உள்ளனர்.

1  இலட்சத்து 86 ஆயிரத்து 514 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Reviews

Related post