கட்டுக்கடங்காமல் இயங்கும் டியூட்டரிகள் கால வரையறையின்றி இழுத்து மூடப்படும்..!

 கட்டுக்கடங்காமல் இயங்கும் டியூட்டரிகள் கால வரையறையின்றி இழுத்து மூடப்படும்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் சட்டவிரோமாக இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் காலவரையறையின்றி மூடப்படுமென கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

நாட்டில் கொவிட்-19 தொற்று வேகமாக பரவி வருகின்ற சூழ்நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்முனைப் பிராந்தியத்தில் சில தனியார் கல்வி நிலையங்கள் சட்ட விரோதமாக இயங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

குறித்த கல்வி நிலையங்கள் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாரினால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கால வரையறையின்றி
மூடப்படும்.

இவ்வாறு சட்டவிரோதமாக இயங்கும் தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டங்கள் கூட்ட வேண்டாமெனவும் மக்கள் ஒன்று கூட வேண்டாமெனவும் அரசாங்கத்தினால் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான கல்வி நிலையங்கள் இயங்குவது பிரதேசத்தின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

0 Reviews

Related post