கரையோர சுத்தப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கல்முனையில் இடம்பெற்ற சிரமதானம்..!

 கரையோர சுத்தப்படுத்தல் தினத்தை முன்னிட்டு கல்முனையில் இடம்பெற்ற சிரமதானம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை கல்முனையில் விசேட சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றன.

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை, பிரதேச செயலகம், லயன்ஸ் கழகம், கடற்படை, சிவில் பாதுகாப்பு பிரிபு என்பவற்றின் பங்களிப்புடன் இச்சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இச்சிரமதான நடவடிக்கைகளின்போது சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிலான கடற்கரையோரப் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இதன்போது சேகரிக்கப்பட்ட திண்மக்கழிவுகள் யாவும் உடனுக்குடன் கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவினால் அகற்றப்பட்டன.

0 Reviews

Related post