களுத்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட இருவர் கைது!

 களுத்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட இருவர் கைது!

களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட இருவர் களுத்துறை தெற்கு பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பிரதேசத்தில் மூடப்பட்டிருந்த வர்ணன் பெர்ணான்டோ மைதானத்தின் பூட்டை உடைத்து உட்புகுந்தமை தொடர்பாக அதன் முகாமையாளரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஏ.டீ.நிலந்த மற்றும் மற்றுமொருவர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 23 ஆம் திகதி குறித்த இருவர் உள்ளிட்ட 12 பேர் மைதானத்தினுள் அனுமதியின்றி நுழைந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை மற்றும் பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக முன்னிலையான மேலதிக மன்றடியார் நாயகம் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் நீதிமன்றத்துக்கு இன்று(26) இந்த விடயத்தை கூறியுள்ளார்.

0 Reviews

Related post