கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் மே-17 இல் அமுலாகும்; மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் தெரிவிப்பு..!

 கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் மே-17 இல் அமுலாகும்; மாகாண கல்விப் பணிப்பாளர் நிசாம் தெரிவிப்பு..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிசாம் தெரிவித்துள்ளார்.

இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்க செயலாளர் ஏ.எல்.முகம்மட் முக்தார் அவர்கள் மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆசிரியர் இடமாற்ற விவகாரம் தொடர்பில் உரையாடியபோதே அவர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரித்துள்ளதாவது;

தற்போது புனித றமழான் நோன்புக்காக முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகிறன. இந்நிலையில் தமிழ் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், முஸ்லிம் பாடசாலைகளில் விடுமுறை காலத்தில் கடமையேற்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

முஸ்லிம் பாடசாலைகளில் இருந்து தமிழ் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படுவோர், முஸ்லிம் பாடசாலைகளில் தற்போது அனுபவிக்கின்ற புனித நோன்பு கால விடுமுறையை அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு இரு வகைப் பாடசாலைகளுக்கும் பொதுவாக மே மாதம் 17 ஆம் திகதி தொடக்கம் இந்த ஆசிரியர் இடமாற்றங்களை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது- என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடமாற்றங்கள் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மாகாண கல்வி அமைச்சினால் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Reviews

Related post