கொரோனாவைக் கண்டுபிடிக்கும் நாய்..!

 கொரோனாவைக் கண்டுபிடிக்கும் நாய்..!

ஒரு நிமிடத்துக்குள் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று மோப்பம் பிடித்துச் சொல்கின்றன ஜெர்மனியின் இராணுவத்துறைக்குச் சொந்தமான எட்டு நாய்கள்.

வாசனையை நுகர்வதில் மனிதனைவிட ஆயிரம் மடங்கு அதிகமான திறன் வாய்ந்தது நாய். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து வெளிப்படும் வாசனை வித்தியாசமானது.

இந்த வாசனையைக் கண்டறியும் பயிற்சியை அந்த நாய்களுக்கு வழங்கியிருக்கின்றனர். நாய்களை வைத்து ஆயிரம் பேரிடம் கொரோனா சோதனை செய்ததில் 94 சதவீத முடிவு துல்லியமாக இருந்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள ஏர்போர்ட், விளையாட்டு மைதானங்கள் உட்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நாய்களை வைத்தே கொரோனா பரிசோதனை செய்யவிருக்கின்றனர்.

நன்றி: இந்தியன் குங்குமம்

0 Reviews

Related post