சாய்ந்தமருதில் எவரிடமும் வாகனத் தரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டாம்..! -கல்முனை மாநகர சபை அறிவிப்பு

 சாய்ந்தமருதில் எவரிடமும் வாகனத் தரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டாம்..! -கல்முனை மாநகர சபை அறிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு எல்லையினுள் வாகன தரிப்பிடக் கட்டணம் அறவிட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள கல்முனை மாநகர சபை, எவரிடமும் அவ்வாறு கட்டணம் செலுத்த வேண்டாம் எனவும் கேட்டுள்ளது.

இது தொடர்பாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளதாவது;

சாய்ந்தமருது பிரதேசத்தில் சில நபர்கள் வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிடுவதாக மாநகர சபைக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

ஆனால் இவ்வாறு வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிடுவதற்கு மாநகர சபையனால் பள்ளிவாசலுக்கோ வேறு எவருக்குமோ அனுமதி வழங்கப்படவில்லை.

ஆகையினால், சாய்ந்தமருது பிரதேசத்தில் பிரதான வீதியாயினும், உள்ளுர் வீதிகளாயினும் மாநகர சபை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை எவரிடமும் வாகனத் தரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டாம் என வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

எவராவது வாகனத் தரிப்புக் கட்டணம் கோரினால் உடனடியாக மாநகர சபைக்கு அறிவிக்கவும்.

மேலும், இதன் பின்னர் எவராவது வாகனத் தரிப்புக் கட்டணம் அறவிட்டால் இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது- என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Reviews

Related post