நாட்டில் மனிதத்துவம் குறைந்துள்ளது..! அதாஉல்லா ஆதங்கம்

 நாட்டில் மனிதத்துவம் குறைந்துள்ளது..! அதாஉல்லா ஆதங்கம்

நாட்டில் மனிதத்துவம் குறைந்து வருகிறது. ஆகையால், பாடசாலைக் கல்வியில் ஆன்மீக கல்வியை அறிமுகப்படுத்த வேண்;டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

கல்வி அமைச்சு தொடர்பான நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், கல்வித்துறையில் பல முன்னேற்றகரமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், நல்ல மனிதப் பன்புகளைக் கொண்டவர்கள் நாட்டில் உருவாக்கப்படவில்லை என்றார்.

எனவே, ஆன்மீக கல்வி ஊடாக மனித மனங்களை மாற்ற வேண்டுமெனத் தெரிவித்த அவர், நாட்டு வளத்தை சரியாக கல்விக்குப் பயன்படுத்த வேண்டும் எனவும் மண்ணுக்கும் அவ்வவ் பிரதேசத்துக்கம் ஏற்றவாறான கல்வியை வழங்க வேண்டும் என்றார்.

மேலும், புத்தகக் கல்வியோடு நின்றுவிடாது, ஆக்கப்பூர்வமான கல்விக்கான கல்வி கொள்கை நாட்டுக்கு அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

0 Reviews

Related post